2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஜப்பானிய கலாசார விழா

Menaka Mookandi   / 2012 நவம்பர் 17 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் நட்புறவின் 60ஆவது ஆண்டை நிறைவு செய்யும் முகமாக ஜப்பானிய கலாசார விழா யாழ்ப்பாணத்தில் இன்று சனி;கிழமை நடைபெற்றுள்ளது.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற அந்த நிகழ்வில் 50 ஜப்பானிய கலைஞர்கள் கலந்துகொண்ட மேலைத்தேய இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

இந்த நிழ்வில் பிரதம அதீதியாக இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபுஹிதோ ஹொபோ மற்றும யாழ் இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அத்துடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜப்பான் தூதுவர் நொபுஹிதோ ஹொபோ தமிழில் உரையாற்றியுள்ளார் அவர் தனது உரையில்,

'இலங்கையும் ஜப்பானும் 60 ஆண்டு காலமாக பொருளாதாரம் மற்றும் கலாச்சார ரீதியில் நெருக்கமான உறவைப் பேணி வருகின்றது. இந்த உறவின் வெளிப்பாடாகவே இந்த ஜப்பானிய கலாசார விழா அமைந்துள்ளது' என்று தமிழில் உரையாற்றினார்.

அத்துடன் அந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய அடங்களில் இருந்து 1000 மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .