2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

தமிழ் பண்பாட்டை பேணிப் பாதுகாப்பதில் பெரும் பங்களிப்புச் செய்தவர் செல்லையா: அனுதாப செய்தியில் பிரபா

Super User   / 2012 செப்டெம்பர் 12 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

"உலக பண்பாட்டு இயக்கத்தின் முன்னால் தலைவரும் தற்போது சிறப்பு தலைவருமாக இருந்து அரும் பணியாற்றிய தமிழ்ச்செம்மல் செல்லையா ஐயா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையுற்றோம்.

இலங்கை வாழ் தமிழ் பெரு மக்களின் சார்பிலும் எனது சார்பிலும் அவருடைய குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் விடுத்துள்ள தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


"உலக பண்பாட்டு இயக்கத்தின் தலைவராக அவர் கடமையாற்றிய காலத்தில், உலகளாவிய தமிழர்களுக்கு தமிழ் பண்பாட்டின் முக்கியத்துவத்தையும் பெருமைகளையும் நன்கு உணர்த்தி, அனைவரும் தமது பண்பாட்டை பேணிப் பாதுகாப்பதில் பெரும் பங்களிப்பு அளிக்க வேண்டும் என்பதையும் அவர் உணர்த்தி வந்துள்ளார்.
 
இவர் போன்ற பண்பாட்டு செயற்பாட்டாளர்களின் சேவை உலகலாவிய தமிழினத்திற்கு ஒரு கட்டாய தேவையாகும். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் அதே வேளை அவருடைய பண்பாட்டு பணியை நாம் அனைவரும் முன்னெடுத்திச் செல்வோம் என திட சங்கற்பம் பூணுவோமாக. சர்வதேச ரீதியில் பல்வேறு மாநாடுகளை நடாத்தி வெற்றி கண்ட செல்லையா அவர்களின் மரணம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X