2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

யாழில் பாரதி விழா

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 11 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ்ப்பாண தமிழ் சங்கம் ஏற்பாடு செய்த 'பாரதி விழா', இன்று செவ்வாய்க்கிழமை நல்லூர் துர்க்காதேவி மணி மண்டபத்தில் நடைபெற்றது.

இன்று காலை 9 மணிக்கு வண. கலாநிதி மரியசேவியர் அடிகளார் தலைமையில் ஆரம்பான காலை அமர்வில் யாழ். தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் சிவ மகாலிங்கத்தின் நெறிப்படுத்திலில் 'எங்கள் பார்வையில் பாரதி' என்னும் மாணவர் அரங்கமும் இடம்பெற்றது.

தொடர்ந்து 'மகாகவி பாரதி' என்னும் இறுவெட்டும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்த இறுவெட்டினை யாழ் தமிழச் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் சண்முகதாஸ்  மற்றும் தமிழச்சங்கத்தின் செயலாளர் இரா செல்வவடிவேல் ஆகியோரால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தொடர்ந்து சிறப்புரை இடம்பெற்று 'பாரதியின் பன்முக ஆளுமையும் புனைதிறனும்' என்னும் கருப்பொருளில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களின் பேச்சுக்களும் இதன்போது இடம்பெற்றது.

இந்த காலை அமர்வில் நல்லை ஆதீன குருமுதல்வர், வடமாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஸ்ரீதேவி மற்றும் ஆசியரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மாலை அமர்வு 3.30 மணிக்கு பேராசிரியிர் சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் 'கனவு மெய்பட வேண்டும்' என்ற தலைப்பில் கவியரங்கம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0

  • ss Sunday, 16 September 2012 09:21 AM

    நல்ல நிகழ்வு பதிவு! வாழ்க வளமுடன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X