2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் பௌர்ணமி நிகழ்வு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 27 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                       (நவரத்தினம்)
வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் நடத்தும் மாதாந்த முழு நிலா கருத்தாடல் நிகழ்வு இம் முறையும் 148 ஆவது நிகழ்வாக எதிர்வரும் 31 ஆம் திகதி காலை 10 மணிக்கு வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

கந்தையா ஸ்ரீகந்தவேள் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் 'சிறுவர் துஷ்பிரயோகம்' என்ற தொனிப்பொருளில் கருத்தாடலினை வவுனியா சிறுவர் அபிவிருத்தி மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜே.கெனடி ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன் கருத்துரையினை உள சமூக இணைப்பாளர் எஸ்.நந்தசீலன் வழங்கவுள்ளார்.

இதேவேளை வட்டூர்க் கவிஞர் அமரர் கதிர் சரவணபவனின் அஞ்சலியுரையினை தமிழ்மணி அகளங்கன் நிகழ்த்தவுள்ளதுடன் சிறப்புரையினை கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் உப செயலாளர் மாணிக்கம் ஜெகன் வழங்கவுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X