2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

'சம்மாந்துறை பெயர் வரலாறு' நூல் வெளியீடு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 26 , மு.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)


சம்மாந்துறை வாழும் இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் எம்.ஐ.எம்.சாக்கீர் எழுதிய 'சம்மாந்துறை பெயர் வரலாறு' என்னும் நூல்  வெளியீட்டு விழா சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

நூலின் முதல்ப் பிரதியை நூல் ஆசிரியரிடம் இருந்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்  பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் எம்.ஐ.பௌஸ்தீன் நூல் அறிமுக உரையும் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ் சிறப்பு உரையும் ஆற்றினர்.

சம்மாந்துறை வாழும் இலக்கிய வட்டத்தின் தலைவர் எம்.எம்.சமீர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் போராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் , சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சுர், முன்னாள் பிரதேசசபைத் தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சுர் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X