2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

வவுனியா ஆங்கில மன்றத்தின் ஒயாசீஸ் சஞ்சிகை வெளியீடு

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)

வவுனியா ஆங்கில மன்றத்தின் ஒயாசீஸ் (Oasis) ஆங்கில சஞ்சிகை மற்றும் ஆங்கில தொடர்பாடல் இறுவெட்டும் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை பூங்கா வீதியில் உள்ள வவனியா வளாகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மன்றத்தின் இணைச்செயலாளர் எஸ்.சிவபாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வவுனியா வளாகத்தின் முதல்வர் இ.நந்தகுமார், சிரேஷ்ட சட்டத்தரணி மு.சிற்றம்பலம், வவுனியா கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி க.பேர்ணாட், வவுனியா கல்வி வலயத்தின் ஆங்கில பாட உதவிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி கு.ஐயம்பிள்ளை, எஸ்.பூபாலசிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், விமர்சன உரையினை பி.ஏ.சி.ஆனந்தராஜாவும் வடமாகாண ஆங்கில பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் ந.சோமஸ்கந்தராஜாவும் நிகழ்த்தினர்.

ஏற்புரையினை ஆங்கில மன்றத்தின் துணை செயலாளரும் சஞ்சிகையின் இணை ஆசிரியருமான கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் ஆற்றியிருந்தார்.

இதன்போது வவனியா மாவட்டத்தில் ஆங்கில துறையின் வளர்ச்சிக்கு சேவையாற்றிய வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் ஆங்கில பாட முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர்காளன திருமதி கு.ஐயம்பிள்ளை, எஸ்.பூபாலசிங்கம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X