2024 டிசெம்பர் 28, சனிக்கிழமை

'எங்களையும் இம்மண்ணில் மனிதராக வாழவிடுங்கள்' நூல் வெளியீட்டு விழா

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 10 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
(சி.குருநாதன்)


ஊடகவியலாளர் சேனையூர் அ.அச்சுதன் எழுதிய 'எங்களையும் இம்மண்ணில் மனிதராக வாழவிடுங்கள்' என்ற 23 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு நூல்  வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

நீங்களும் எழுதலாம் கவிதை சஞ்சிகையின் ஆசிரியர் எஸ்.ஆர்.தனபாலசிங்கம் தலைமையில் திருகோணமலை நகரசபையின் பொதுநூலகக் கேட்போர்கூடத்தில் இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நூலாசிரியர் அச்சுதனிடமிருந்து முதலாவது பிரதியை வேதாகமாமணி பிரம்மஸ்ரீ சோ.இரவிச்சந்திரக்குருக்கள் வாங்கி வெளியிட்டுவைத்தார். நூல் மதிப்பீட்டு உரையை செல்வாநாயகபுரம் இந்து மகாவித்தியாலய  அதிபர் க.பேரானந்தம் நிகழ்த்தினார்.

முதன்மை அதிதியாக திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்னசிங்கம், சிறப்பு அதிதியாக திருகோணமலை நகரசபையின் தலைவர் க.செல்வராசா, கௌரவ அதிதியாக சிவஸ்ரீஹரிஓம் செல்வரத்தினக்குருக்கள் ஆகியோர் பங்குபற்றினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X