2025 ஏப்ரல் 28, திங்கட்கிழமை

மறைந்த வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா

Kogilavani   / 2012 மே 11 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே..என்.முனாஷா)
இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் மறைந்த இராஜேஸ்வரி சண்முகத்தின் ஞாபக விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தை தமிழ்ச்;சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில்  இடம்பெறவுள்ளது.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் பிரதம நிறைவேற்று அலுவலர் சாந்தி சச்சிதானந்த்ததின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை, கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவகீர்த்தா பிரபாகரன், இலங்கையின் முதலாவது பெண் நீதிபதி ஏ.எல்.நூறுஸ் மைமுனா, முன்னாள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எஸ்.நிஜாமுதீன், புரவலர் ஹாசிம் உமர், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எஸ்.எம்.ஹமீட், கவிஞர் ஜின்னாஹ் சரிபுதீன், முஹமட் மர்ஸூக், பிரபல அறிவிப்பாளர் அஷ்ரப் சிஹாப்தீன் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.

தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கவியரங்கம் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு என்பனவும் இடம்பெறவுள்ளன.

You May Also Like

  Comments - 0

  • NM.SIRAJDEEN siro Sunday, 13 May 2012 05:24 AM

    விழா சிறப்பாக நடைபெற என் வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    NM.SIRAJDEEN siro Monday, 14 May 2012 05:35 AM

    vaalthukal

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X