Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 21 , மு.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
கலாபூஷணம் ஆசுகவி அன்புடீன் எழுதிய 'நெருப்பு வாசல்' சிறுகதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மாலை அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் இடம்பெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ் அப்துல்லா தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதிதியாக உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா கலந்து கொண்டார்.
மேலும், இவ்விழாவில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, முன்னாள் நீதிபதி கலாநிதி ஏ.எல்.ஏ.கபூர், ஜனாதிபதி புலனாய்வுப் பிரிவு அதிகாரி எம்.எம்.காலித்தீன், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் எம்.ஐ.எம்.லத்தீப், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.காசிம் மற்றும் கவிஞர் பாலமுனை பாறூக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேற்படி வெளியீட்டு நிகழ்வின்போது நூலின் முதல் பிரதியை கவிஞர் அன்புடீனின் மனைவி அதிதிகளுக்கு வழங்கி வைக்க, சிறப்புப் பிரதிகளை நூலாசிரியர் அன்புடீன் வழங்கி வைத்தார்.
1980 மற்றும் 90 களில் அன்புடீன் எழுதிய 11 சிறுகதைகள் மேற்படி 'நெருப்பு' வாசல் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
இந்நூலுக்கான முன்னுரையினை கவிஞர் சண்முகம் சிவலிங்கம் எழுதியுள்ளார்.
'நெருப்பு வாசல்' நூல் வெளியீட்டினை மூன் பிறைட் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
4 hours ago
4 hours ago
6 hours ago