2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பௌர்னமி தின 'பாடிப்பறை' நிகழ்வு

Kogilavani   / 2012 ஜனவரி 08 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(க.கோகிலவாணி)
சமூக விஞ்ஞான கற்கை வட்டத்தின் ஏற்பாட்டில் ஒவ்வொரு பௌர்னமி தினமும் நடத்தப்படும் பாடிப்பறை நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளவத்தையில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கிய பேரவையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், கவியாற்றுகை, ஆய்வுரைகள்,  கூத்து ஆற்றுகை என்பன இடம்பெற்றன.

இதன்போது, கவிஞர் தவ சாஜிதரனின் 'ஒளியின் மழைலைகள்' தொகுப்பிலிருந்து 'காலம் முந்திக் கிளர்கிற கடைசிப் பாடல்' எனும் கவிதை வி.விமலாதித்தனால் கவியாற்றுகை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 'கூத்துப் பாடல்களின் உள்ள கவிதைக் கூறுகள்' எனும் தலைப்பிலான அறிமுக உரையை கிழக்குப் பல்கலைக்கழகம் நுண்கலைத்துறை தலைவர் சி.ஜெயசங்கர் நிகழ்த்தினார்.

மட்டக்களப்பில் இயங்கிவரும் 'மூன்றாவது கண்' உள்ளூர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவின் ஏற்பாட்டில் சீலாமுனை பிரதேசத்தின் பாரம்பறிய ஆற்றுகையான 'துரியோதரன் கொளு வரவு' கூத்து ஆற்றுகை செய்யப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலை பீடத் தலைவரும் மட்டக்களப்பு மூன்றாவது கண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழுவின் இணைப்பாளருமான சி.ஜெயசங்கர், அண்ணாவியார் சி.ஞானசேகரம் ஆகியோரின் நெறிப்படுத்தலின் கீழ் அரங்கேற்றப்பட்ட மேற்படி கூத்தில் கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்கள் ஊட்பட 12 பேர் பாத்திரமேற்றிருந்தனர்.

இந்நிகழ்வின்போது, கவிஞர்கள், ஆரவலர்கள் என பெருந்திரளானோர் கலந்துக்கொண்டிருந்தனர். (படம்: நிஷால் பதுகே)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .