2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

பட்டமளிப்பு விழா

Kanagaraj   / 2014 மே 25 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.வை.அமீர்
,ரீ.கே.றஹ்மத்துல்லா

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 9ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (24) பல்கலைக்கழக, ஒலுவில் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விஷேட அரங்கில் இடம்பெற்றது.

பட்டதாரிகளின்அணிவகுப்பினை அடுத்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர்.அச்சி முகம்மட் இஷாக் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

முதல் நிகழ்வாக சட்டத்துறையில் சாதனைபடைத்த ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வீ.வீரமந்திரி மற்றும் பாயீஸ் முஸ்தபா ஆகியோருக்கு விஷேட கலாநிதி பட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கற்ற 441 மாணவர்கள் தாம் கற்ற பிரிவுகளில்  பட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

2011/2012 கல்வி ஆண்டில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் வணிக நிர்வாக முதுகலை பட்டத்தை 09 மாணவர்களும், பிரயோக விஞ்ஞான பீடத்தில் இருந்து 2007/2008 கல்வி ஆண்டில் விஞ்ஞானத்தில் இளங்கலை பட்டம் (விஷேடம்) 03 மாணவர்களும், பிரயோக விஞ்ஞான பீடத்தில்  2008/2009 கல்வி ஆண்டில் இளங்கலை பட்டத்தை 31 மாணவர்களும் பெற்றுக்கொண்டனர்.

கலைக்கலாச்சார பீடத்தில் இருந்து 2007/2008 கல்வி ஆண்டில் விஷேட பட்டத்தை 45 மாணவர்களும், 2008/2009 கல்வி ஆண்டில் 89 மாணவர்களும், அரபு இஸ்லாமிய பீடத்தில் இருந்து விஷேட பட்டத்தை 2007/2008 கல்வி ஆண்டில் 24 மாணவர்களும்,  2008/2009 கல்வி ஆண்டில் பட்டத்தை 83 மாணவர்களும்,   2007/2008 கல்வி ஆண்டில் வர்த்தக முகாமைத்துவ பட்டத்தை 65 மாணவர்களும், 2008/2009 கல்வி ஆண்டில் வர்த்தக பட்டத்தை 41 மாணவர்களும், 2008/2009 கல்வி ஆண்டில் விஞ்ஞான தொழில்நுட்ப பட்டத்தை ஒருவரும் 2008/2009 கல்வி ஆண்டில் விஞ்ஞான தொழில்நுட்ப பட்டத்தை 52 மாணவர்களும் பெற்றுக்கொண்டனர்.

பிரயோக விஞ்ஞான பீடத்திலிருந்து சிறந்த மாணவியாக மர்ஹம் கலாநிதி எம்.எச்.எம்.அஸ்ரப் ஞாபகார்த்த பதக்கத்தை எம்.என்.பஸ்லுல் ஹஸ்னாவும், கலைகலாச்சார பீடத்தில் இருந்து பேராசிரியர் கைலாசபதி ஞாபகார்த்த பதக்கத்தை எம்.ஆர்.றாசியாவும், வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இருந்து அல் ஹாஜ் ஏ.எல்.இப்ராலெப்பை  ஞாபகார்த்த பதக்கத்தை ஏ.ஆர்.பாத்திமா தபாணியும், அல் ஹாஜ் ஏ.எம்.இஸ்மாயில் ஞாபகார்த்த பதக்கத்தை ஜீ.எம்.எம்.பாத்திமா ரக்சானாவும் பெற்றுக்கொண்டனர்.

ஓய்வுபெற்ற நீதியரசர் சீ.வீ.வீரமந்திரியால், ஒரு தொகுதி நூல்கள் பல்கலைக்கழகத்துக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், கலாநிதி பீ.வீ.ஜெயசுந்தரவுக்கு பல்கலைக்கழக உபவேந்தரால், நினைவுச்சின்னம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் பைசர்முஸ்தபா, மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் ஆகியோர் கலந்து கொண்டதுடன் கலாநிதி பீ.வீ.ஜெயசுந்தர பற்றிய அறிமுகமொன்றினை உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் வழங்கினார். திறைசேரியின் ஆளுநரும், நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கலாநிதி பீ.வீ.ஜெயசுந்தர விசேட உரையாறினார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .