2024 நவம்பர் 02, சனிக்கிழமை

"இந்திய வம்சாவழியினரின் பாரம்பரிய கூத்துக்கள்' நூல் வெளியீடு

Super User   / 2014 ஜூன் 30 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பாலகிருஷ்ணன் திருஞானம்


மலையக கலைப் பேரவை ஏற்பாட்டில் எஸ். ஹரீஸ் எழுதிய இலங்கை இந்திய வம்சாவழி மக்களின் பாரம்பரிய கூத்துக்கள் தொடர்பான நூல் வெயீடும் காமன் கூத்து நிகழ்வும் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை கண்டி ஈ.எல்.சேனநாயக்க சிறுவர் நூல் நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

 பேராதனை பல்கலைக்கழக ஓய்வு நிலை பேராசிரியர் துரை மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன், சிறப்பு விருந்தினராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஓய்வு நிலை பேராசிரியர் சி.மௌனகுரு ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மலையக கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதோடு, இந்திய வம்சாவழி மக்களின் பாரம்பரிய கூத்துக்களும் மேடையேற்றப்பட்டது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .