2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

'மொழிமுனை 2014' மாவட்டரீதியான போட்டி முடிவுகள்

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 26 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரிஷாங்கன்


இலங்கை தமிழ் விவாதிகள் கழகமானது, பாடசாலை மாணவர்களிடையே அகில இலங்கைரீதியாக நடாத்திக் கொண்டிருக்கும் “மொழிமுனை 2014” தமிழ் விவாதச்சுற்றுப்போட்டி, தற்போது மாவட்ட வாரியாக நடைபெற்றவண்ணம் உள்ளது. கடந்த சனிக்கிழமை (22) திருகோணமலை, நுவரெலியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) வவுனியா மாவட்டத்திலும் மாவட்டரீதியான போட்டிகள் நடைபெற்றன.

12 பாடசாலைகள் பங்கு கொண்ட திருகோணமலை மாவட்டப் போட்டியில், ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி முதலிடத்தைப் பெற்று வெற்றிவாகையை சூடிக் கொண்டது. ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி இரண்டாம் இடத்தையும் புனித மரியாள் கல்லூரி மூன்றாம் இடத்தையும் வென்றெடுத்தன. போட்டியின் சிறந்த விவாதிகளாக ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் செல்வன் திருக்குமரநாதன் கோபிப்ரகாஷ்,  ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த செல்வி மாதங்கி நவக்குமார் ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

11 பாடசாலைகள் பங்கு கொண்ட நுவரெலியா மாவட்டத்திற்கான போட்டி, ஹட்டன் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில், ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி முதலிடத்தைப் பெற்று வெற்றிவாகை சூடியது. நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும் புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயம் மூன்றாம் இடத்தையும் வென்றெடுத்தன. போட்டியின் சிறந்த விவாதியாக ஹட்டன் ஹை லண்ட்ஸ் கல்லூரி மாணவி ரதுஷினி சண்முகதாஸ் தெரிவு செய்யப்பட்டார்.

8 பாடசாலைகள் பங்கு கொண்ட மன்னார் மாவட்டத்திற்கான சுற்றுப்போட்டியில், மன்னார் சித்தி விநாயகர் இந்துக்கல்லூரி முதலிடத்தைப் பெற்று வெற்றிவாகையை சூடிக் கொண்டது. மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி இரண்டாம் இடத்தையும் மன்னார் உயிலங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மூன்றாம் இடத்தையும் வென்றெடுத்தன. போட்டியின் சிறந்த விவாதியாக மன்னார் சித்தி விநாயகர் இந்துக்கல்லூரியைச் சேர்ந்த செல்வி எம்.சிவிஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

12 பாடசாலைகள் பங்குபற்றிய வவுனியா மாவட்டத்திற்கான போட்டியில், இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம் முதலிடத்தைப் பெற்று வெற்றிவாகையை சூடிக் கொண்டது. இரண்டாம் இடத்தை புதுக்குளம் மகா வித்தியாலயமும் மூன்றாம் இடத்தை இலங்கை திருச்சபை தமிழ் மத்திய மகா வித்தியாலயமும் வென்றெடுத்தன. போட்டியின் சிறந்த விவாதியாக புதுக்குளம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வன் தி.பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பல்வேறு வளக் குறைபாடுகள் ஏற்படுத்திய தடைகளைத் தாண்டியும் மாணவ, மாணவியர் இப்போட்டிகளில் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. தமிழ் விவாதக் கலையின் மீதான ஆர்வம் மாணவர்களிடையே மெல்ல மெல்ல அதிகரித்துவருவதை இது காண்பிக்கின்றது. இம்மாவட்டங்களில் “மொழிமுனை 2014” தமிழ் விவாதச் சுர்றுப்போட்டியின் மாவட்டரீதியான போட்டிகளை நடாத்த பல வகையிலும் உதவிசெய்த அனைவருக்கும் இலங்கை தமிழ் விவாதிகள் கழகம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

எதிர்வரும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டப் போட்டிகளும் இடம்பெறும்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .