2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

வியட்நாம் திரைப்பட விழா பெப். 15 இல் ஆரம்பம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 01 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(க.கோகிலவாணி)

இலங்கைக்கும் வியட்நாமுக்குமான தொடர்புகள் நீண்ட காலம் நிலைத்திருக்கச் செய்யும்; வகையில் இலங்கையில் முதற்தடவையாக வியட்நாம் திரைப்பட விழா இடம்பெறவுள்ளது. இதேவேளை வியட்ம்நாம் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் இலங்கையில் எதிர்வரும் காலங்களில் இன்னும் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் தொன் சிங் தான்ந் தெரிவித்தார்.

இலங்கையில் முதன் முதன்முறையாக வியட்ம்நாம் நாட்டின் திரைப்படவிழா எதிர்வரும் 15 திகதி தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தில் இடம்பெறவுள்ளது. இதுத்தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற போதே இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

'இத்திரைப்படவிழாவானது வியட்நாமின் முதல் கலாசார நிகழ்வாக இங்கு இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையைச் சேர்ந்த 20 நடனக்கலைஞர்களை உள்ளடக்கிய குழுவொன்று வியட்நாமுக்குச் சென்று வியட்நாமில் நடைபெறவுள்ள கலை நிகழ்வொன்றில் பங்குபற்றவுள்ளனர். இந்நிகழ்வினைத் தொடர்ந்து எதிர்வரும் ஜுன் மாதம் கண்காட்சியொன்றும் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கும் வியட்நாமிற்குமிடையிலான உறவை நீண்டகாலம் தொடரச்செய்யும் என்ற நோக்கில் இத்திரைப்படவிழா இடம்பெறவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதேவேளை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அசோக சேரசிங்க தெரிவிக்கையில்,

'நான் அறிந்த மட்டில் இலங்கையில் வியடம்நாம் திரைப்பட விழா இடம்பெறுவது இதுவே முதல்தடவையாகும். இந்தத் திரைப்படவிழாவினூடாக இலங்கைக்கும் வியடம்நாமிக்குமான உறவுகள் நீண்டு நிலைக்கவுள்ளன. இலங்கை மக்கள் வியட்நாம் பற்றியும் அந்நாட்டின் கலை கலசாரம் குறித்தும் அறிந்துக்கொள்வதற்கான ஒரு அறிய வாய்ப்பாக இத்திரைப்படவிழா அமையபோகின்றது. வியட்நாம் மொழிக்கும் எமது நாட்டு மொழிக்கும் வேறுபாடுகள் காணப்பட்டாலும் வியட்நாம் குறித்த நல்லதொரு அடையாளத்தை இத்திரைப்படவிழா ஏற்படுத்திக் கொடுக்கும். உண்மையில் இந்தத் திரைப்படவிழாவை நாம் மறந்துவிட முடியாது' என்றார்.

இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதரகத்தின் ஒழுங்கமைப்பில்; இடம்பெறவுள்ள இத்திரைப்படவிழா தொடர்ந்து 5 தினங்களுக்கு நடைபெறவுள்ளது. வியம்நாம் யுத்தம் குறித்து 3 திரைப்படங்களும், காதல் கதையம்சம்; 2 திரைப்படங்களும் இதன்போது திரையிடப்படவுள்ளன.

'டோன் பேர்ன்',  'ஹெனோய் லிட்ல் கேர்ல்', 'த மூன் இன் த பொட்டம் ஒப் த வெல்', 'வைல் பீல்ட்' ,  'ஸ்டோரி ஒப் பா' ஆகிய திரைப்படங்களே இதன்போது வெளியிடப்படவுள்ளன. இத்திரைப்படங்களுக்கான அனுமதி இலவசமாகும்.

(படங்கள்: பிரதீப் டில்ருக்ஷன)



 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .