2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

தென்றல் சஞ்சிகையின் 25ஆவது சிறப்பு மலர் வெளியீடு

Kogilavani   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

தென்றல் சஞ்சிகையின் 25ஆவது சிறப்பு மலர் வெளியீடும் கலைஞர்கள் கௌரவிப்பும் எதிர்வரும் 26ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

சஞ்சிகை ஆசிரியர் கே.கிருபாகரன் தரைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எஸ்.மனோகரன், சிறப்பு அதிதியாக ரூபவாஹினி தயாரிப்பாளர் எஸ்.மோசேஸ் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நிகழ்வில், சிறப்புப்பிரதியை மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் பொருளாளர் இ.ரஞ்சிதமூர்த்தி பெறுகிறார்.

தென்றல் சஞ்சிகையின் 25ஆவது சிறப்பு மலருக்கான அறிமுகத்தினை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவி திருமதி ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் வழங்குகிறார்.

அத்துடன், வீசு தென்றல் விருதுகளை பாலகிருஸ்ணன் வயிரவநாதன், கதிராமன் தங்கேஸ்வரி, இ.பாக்கியராசா, ஆ.அரசரெத்தினம், க.செல்வநாயகம், திருமதி பாத்திமா முஹமத் ஆகியோர்   பெறவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .