2024 டிசெம்பர் 26, வியாழக்கிழமை

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு - 2013

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 25 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வருட இறுதிப் பகுதியில் நடைபெறவுள்ள உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை நாடு பூராகவுமுள்ள முஸ்லிம் கலை, இலக்கிய அமைப்புகளை ஒன்றிணைத்து அதன் மூலம் நடத்திச் செல்வது என்று இம்மாநாட்டை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வரும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தீர்மானித்துள்ளார்.
   
இலங்கை முழுவதும் உள்ள முஸ்லிம் கலை, இலக்கிய அமைப்புக்களின் தலைவர், செயலாளர்கள் தங்களது பெயர்களையும் தங்களது அமைப்புகளின் பெயர், சங்கப்பதிவிலக்கம், தொடர்புத் தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, தபால் முகவரி போன்ற விபரங்களைத் தங்களது அமைப்பின் கடிதத்தாளில் அனுப்பிவைக்குமாறு கோரப்படுகிறார்கள்.

கடந்த 7.4.2013 அன்று நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பங்கு கொண்டவர்களில் சிலர் தங்களது அமைப்புகளின் விபரங்களைத் தந்த போதும் பலரது தொடர்பிலக்கம், முகவரி, பதிவிலக்கம் ஆகியன வழங்கப்பட்டிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களும் தங்களது கடிதத் தலைப்பில் தமது அமைப்புப் பற்றிய விபரங்களை அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அத்துடன், இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்திச் செல்வதற்காக மாநாட்டின் போது கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சங்கள், ஆய்வரங்குகளில் பேசப்படவேண்டிய விடயதானங்கள், கலை நிகழ்ச்சிகள் பற்றிய தங்களது கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் புத்திஜீவிகள், இலக்கியப் படைப்பாளிகள், கல்வியியலாளர்கள், அறிஞர்கள், ஆலிம்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் எழுத்து மூலம் தெரிவிக்கலாம் என்று பொதுச் செயலாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் தெரிவித்துள்ளார்.

தமது இலக்கிய அமைப்புக்கள் பற்றிய விபரங்களையும் மாநாடு பற்றிய கருத்துக்களையும் பின்வரும் முகவரிக்கு, கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ‘Wital Con’ எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கலாம்.

முகவரி-
General Secretary
‘Wital Con.’
‘Dharussalam’
51, Vauxhall Lane,
Colombo - 02,
Sri Lanka

You May Also Like

  Comments - 0

  • aizaad Tuesday, 30 April 2013 01:43 AM

    இம்முறையும் பொன்னாடை,பொற்கிழி விழாவாகத்தான் நடந்து முடியுமா? இல்லை நவீன இலக்கியங்களும் உள்வாங்கப்படுமா? இல்லை கும்பமேளாவாக இருக்கப்போகிறதா? புறக்கணிப்புகள் வழமைபோல் இருக்குமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X