Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Gavitha / 2016 செப்டெம்பர் 05 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
- காயத்திரி விக்கினேஸ்வரன்
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் பாரதிவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை(04), யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மாலை 3.30 மணியளவில், யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்தலைவர் பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், மங்கள விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, சைவவித்தியா விருத்திச் சங்க சிறுவர் இல்லப்பிள்ளைகளின் தமிழ்மொழி வாழ்த்து, மானிப்பாய் கலைக்கோயில் மாணவிகளின் வரவேற்பு ஆடல் என்பன நடைபெற்றன.
இந்நிகழ்வின், வரவேற்புரையை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆசிரியர் த.குமரன், தலைமையுரையை பேராசிரியர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் ஆற்றினர்.
இன்னியம் நாதஸ்வரம் நாதஸ்வரக் கலாநிதி ஈழநல்லூர் பி.எஸ்.பாலமுருகன், வயலின் கே.ஆர்.எஸ்.கோபிதாஸ், தவில் லயஞானபாலன், பி.எஸ் செந்தில்நாதன், மிருதங்கம் வ.ரமணா, கடம் கு.ரவிசங்கர், கெஞ்சிரா ந.சிவசுந்தரசர்மா, மோர்சிங் சி.செந்தூரன், தபேலா எஸ்.விமல்சங்கர் ஆகியோரின் இசைக்கச்சேரியும் இடம்பெற்றது.
சென்னை உயர்நீதிமன்றம், இந்திய உச்சநீதிமன்ற சட்டத்தரணி ரவி.கல்யாணராமன், 'பாரதி உலக மகாகவி' என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .