2024 நவம்பர் 25, திங்கட்கிழமை

மூன்று நூல்களின் அறிமுகம்

Thipaan   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்

கலாபூஷணம் கிண்ணியா பீ.ரீ.அஸீஸ் எழுதிய மூன்று நூல்களின் அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழா, பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை இடம் பெற்றது.

பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலய அதிபர் எஸ். முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக கிண்ணியா நகர சபையின் முன்னால்  தவிசாளர் டொக்டர் ஹில்மி மஹ்ரூப், சிறப்பு அதிதிகளாக தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ரீ. ஹபீபுல்லா மற்றும் கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடத் தலைவர் எஸ்.எம். நாபிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பீ.ரீ.அஸீஸ் எழுதிய கிராமியக் கவிதைகளின் தொகுப்பு 'மனசெல்லாம் மகிழ்கிறது', சிறுவர் பாடல்கள்  'துணிந்து நில்', சிறுவர் பாடல்கள் 'சின்னப் பாப்பா' போன்ற மூன்று நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் கவிஞர்கள்,எழுத்தாளர்கள், ஊர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .