Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 21 , மு.ப. 10:32 - 0 - 189
ஷாமிலா செரீப் எழுதிய ‘மறைக்கப்பட்ட சொற்களின் அழகு’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா, கொழும்பு - 10, அல் ஹிதாயா மகா வித்தியாலயக் கேட்போர் கூடத்தில் நாளை 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு, பேராசிரியர் சோ. சந்திரசேகரன் தலைமை தாங்குவதோடு, முதல் பிரதியை, புரவலர் ஹாஸிம் உமர் பெற்றுக்கொள்வார்.
நூல் குறித்து, சிரேஷ்ட ஒலிபரப்பாளரும் எழுத்தாளருமான அஸ்ரப் சிஹாப்தீனும் தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ்.எச்.ஏ சிப்லினும் உரை நிகழ்த்தவுள்ளனர்.
“எனக்குத் தெரிந்த ஷாமிலா” என்ற தலைப்பின் கீழ், கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் தம்பு சிவசுப்ரமணியம், சிரேஷ்ட ஒலிபரப்பாளர் புர்கான் பீ இப்திகார் மற்றும் கவிஞரும் இயக்குநருமான ஈழவாணி ஆகியோர் உரை நிகழ்த்துவதுடன், எழுத்தாளரும் ஆவணப்பட இயக்குநருமான முஸ்டீன் சிறப்புரை ஆற்றுவார்.
உதயம் தொலைக்காட்சித் தொகுப்பாளர் பிஸ்ரின் முஹம்மத், இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
43 minute ago
3 hours ago