2024 நவம்பர் 01, வெள்ளிக்கிழமை

திருக்குறள் மாநாடு இன்று ஆரம்பம்

Kogilavani   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் „திருக்குறள் மாநாடு... இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு ஆரம்பமாகி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(20) வரை நடைபெறவுள்ளது.

இதற்கமைய, இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு ஊர்வலம், காலிவீதி முகப்பிலிருந்து உருத்திரா           மாவத்தையினூடாக கொழும்புத் தமிழ்ச்சங்கத்தை வந்தடையும்.

இன்றைய தின நிகழ்வுகள் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் மாலை 5.30 மணிக்கு தமிழ்ச்சங்கத் தலைவர் மு.கதிர்காமநாதன் தலைமையில், பரிமேலழகர் அரங்கில் நடைபெறும்.  

சங்கக் கொடியை தலைவர் ஏற்றிவைப்பார். வரவேற்புரையை   நூலகக்குழுச் செயலாளர் திருமதி சுகந்தி இராஜகுலேந்திராவும் தொடக்கவுரையை ஆட்சிக்குழு உறுப்பினர்  கே.வி.தவராசாவும் நிகழ்த்துவார்கள்.

மாநாட்டு மலர் வெளியீட்டுரையை நாவலர் நற்பணி மன்றத் தலைவர் ந.கருணை ஆனந்தன் நிகழ்த்த முதற்பிரதியை சட்டத்தரணி திருமதி.ஜெயந்தி விநோதன் பெற்றுக்கொள்வார். சிலம்பும் குறளும் என்ற தலைப்பில் சிறப்புரையை தமிழ்நாடு மூத்த அறிஞர் முனைவர்.சிலம்பொலி சு.செல்லப்பன் நிகழ்த்துவார். நிலையமைப்புச் செயலாளர் மா.சடாட்சரின் நன்றியுரையைத் தொடர்ந்து சங்ககீதத்துடன் வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் நிறைவுபெறும். சனிக்கிழமைக்கான காலை, மாலை நிகழ்வுகள் ஜி.யூ.போப் அரங்கில் நடைபெறவுள்ளனது.

காலை நிகழ்வுகள் 9.30 மணிக்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளன. வரவேற்புரையை ஆட்சிக்குழு உறுப்பினர் மு.மனோகரனும் தொடக்க உரையை ஆட்சிக்குழு உறுப்பினர் வி.ஏ.திருஞானசுந்தரமும் நிகழ்த்துவார்கள்.

மகளிர் அரங்கு

இதனைத் தொடர்ந்து, குறளில் பெண்மை... என்ற தலைப்பில் ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி பத்மா சோமகாந்தன் தலைமையில் மகளிர் அரங்கு நடைபெறும். இல் வாழ்க்கை, மக்கட் பேறு „விருந்தோம்பல், வாழ்க்கைத்துணை நலம் என்ற தலைப்புகளில் ஆட்சிக்குழு உறுப்பினர் திருமதி.பவானி முகுந்தன், கல்வி குழுச் செயலாளர் திருமதி.வளர்மதி சுமாதரன், எழுத்தாளர் திருமதி.வசந்தி தயாபரன், விரிவுரையாளர் திருமதி. விஜிதா திவாகரன் ஆகியோர் பங்குபற்றுவார்கள்.
 

கருத்தரங்கு

வள்ளுவர் வாழ்வு என்ற தலைப்பில் தமிழ்நாடு, மூத்த தமிழறிஞர் முனைவர் சிலம்பொலி மு.செல்லப்பன் தலைமையில் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்துறைத் தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன், நாகர்கோவில் மயிலம் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் த.திருநாவுக்கரசு, தமிழ் நாடு   இந்துக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் நீலகண்டபிள்ளை, தமிழ்நாடு திருக்குறள் சொற்பொழிவாளர் முப்பால்மணி கிருஷ்ணாசத்து சோர்சியா ஆகியோர் உரையாற்றவுள்ளனர். துணை நிதிச் செயலாளர் அ.எதிர்வீரசிங்கத்தின் நன்றியுரையைத் தொடர்ந்து சங்கீதத்துடன் காலை நிகழ்வுகள் நிறைவுபெறும்.

மாலை நிகழ்வுகள் மாலை 5.30 மணிக்கு ஆட்சிக்குழு உறுப்பினர்  கந்தையா நீலகண்டன் தலைமையில் நடைபெறும். வரவேற்புரையை உறுப்புரிமைச் செயலாளர் ப.க.மகாதேவாவும் தொடக்கவுரையை துணைத்தலைவர் ஆ.குகமூர்த்தியும் நிகழ்த்துவர்கள். தமிழ்நாடு மூத்த தமிழறிஞர் முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன் „குறள்நெறி... என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுவார்.
 

பட்டிமன்றம்

கம்பவாரிதி இ.ஜெயராஜ் தலைமையில் „வள்ளுவனின் கூர்ந்த மதிநுட்பம் பெரிதும் வெளிப்படுவது... என்ற தலைப்பில் பட்டிமன்றம்  நடைபெறவுள்ளது. அறத்துப்பாலிலேயே என்ற தலைப்பில் வவுனியா தமிழ்ச்சங்கத் தலைவர் தமிழருவி. த.சிவகுமாரும் துணைத்தலைவர் ஜி.இராஜகுலேந்திராவும் வாதிடுவார்கள். பொருட்பாலிலேயே என்ற தலைப்பில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசனும் கம்பன் கழக அமைப்பாளர் அ.வாசுதேவாவும் வாதிடுவார்கள். காமத்துப்பாலிலேயே என்ற தலைப்பில் ஜெயவர்தன பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஸ்ரீ பிரசாந்தனும் ஆட்சிக்குழு உறுப்பினர் குமரகுருபரன் அஷோக்பரனும்  வாதிடுவார்கள். ஆட்சிக்குழு உறுப்பினர் சந்திரபவானி பரமசாமியின் நன்றியுரையைத் தொடர்ந்து சங்கீதத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெறும்.

ஞாயிற்றுக்கிழமை காலை, மாலை நிகழ்வுகள் பண்டிதர் கா.பொ.இரத்தினம் அரங்கில் நடைபெறும்.  காலை நிகழ்வுகளுக்கு பேராசிரியர்   சோ.சந்திரசேகரன் தலைமை வகிப்பார். வரவேற்புரையை ஆட்சிக்குழு உறுப்பினர் கதிரவேலு மகாதேவாவும் தொடக்கவுரையை ஆட்சிக்குழு உறுப்பினர் ந.காண்டீபனும் நிகழ்த்துவார்கள்.

கருத்தரங்கு  

தமிழ்நாடு மூத்த தமிழறிஞர் சு.சிலம்பொலி செல்லப்பன் தலைமையில் „வழி வழி வள்ளுவன்... என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெறும். வவுனியா தமிழ்ச்சங்கத் தலைவர் தமிழருவி த.சிவகுமார் „வள்ளுவரும் கம்பரும்... என்ற தலைப்பிலும் துணைக்காப்பாளர் சைவப்புலவர் சு.செல்லத்துரை „வள்ளுவரும் சேக்கிழாரும்... என்ற தலைப்பிலும் தமிழ்நாடு மயிலம் கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர் த.திருநாவுக்கரசு „வள்ளுவரும் பாரதியும்... என்ற தலைப்பிலும் உரையாற்றுவர்கள்.

கவியரங்கு  

குறள் தந்த வாழ்வு என்ற தலைப்பில் கவிஞர் வி.விமலாதித்தனும் அறம் வாழியவே என்ற தலைப்பில் இ.எழில்மொழியும் நாடுவாழியவே என்ற தலைப்பில் லுணுகல ஸ்ரீயும், காதல்வாழியவே என்ற தலைப்பில் அ.ஹரிஷனும், „அன்பு வாழியவே என்ற தலைப்பில் கிண்ணியா அமீர் அலியும் கவிதை பொழிவார்கள். ஆட்சிக்குழு உறுப்பினர் மா.தேவராசாவின் நன்றியுரையைத் தொடர்ந்து சங்கீதத்துடன் காலை நிகழ்வுகள் நிறைவுபெறும்.

மாலை நிகழ்வுகள் 5.30 மணிக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் மு.கதிர்காமநாதன் தலைமையில் ஆரம்பமாகும்.  வரவேற்புரையை துணைச் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமியும் தொடக்கவுரையை நிதிச் செயலாளர் செ.திருச்செல்வமும் நிகழ்த்துவார்கள்.

சிறப்புரையை தமிழ்நாடு திருக்குறள் சொற்பொழிவாளர் முப்பால்மணி கிருஷ்ணாசந்து சோர்சியா நிகழ்த்துவார்.

ஒப்புரவாளர் விருது

கொழும்பு கதிரேசன் கோவில் அறங்கால் சபைத் தலைவர் ஆ.மா.சுப்பிரமணியம்„ ஒப்புரவாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளார். அறிமுகவுரையை பதிப்புக்குழுச் செயலாளர் க.க.உதயகுமார் நிகழ்த்துவார். அபிநயஷேத்ரா நடனப்பள்ளி மாணவிகளின் கலைநிகழ்வுகள் நடைபெறும்.

தொடர்ந்து செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு.திருமுருகன், வள்ளுவர் சொன்ன ஆளுமை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார்.

ஆட்சிக்குழு உறுப்பினர்  க.சுந்தரமூர்த்தியின் நன்றியுரையைத் தொடர்ந்து சங்ககீதத்துடன் மாநாடு நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுபெறும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .