Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Gavitha / 2016 செப்டெம்பர் 18 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற முத்தமிழ் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் கடந்த வெள்ளி (16), சனிக்கிழமை(17), திங்கட்கிழமை (18) ஆகிய மூன்று நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றவண்ணம் உள்ளன.
முதலாம் நாள் நிகழ்வு மட்டக்களப்பு, பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றதுடன், இரண்டாம் நாள் நிகழ்வு சுவாமி விபுலானந்தர் அரங்கில் நடைபெற்றது.
இம்முறை முத்தமிழ் விழாவின் மகுட வாசகமாக, 'உலக மயமாக்கல் சூழலில் ஈழத்து கலை இலக்கிய கலாசார போக்கும் சவாலும்', என்னும் தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
தமிழ் மக்கள் பேரவையின் உபதலைவர் த.வசந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பேராசிரியர் சி.மௌனகுரு பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நாடகம், இசை நிகழ்வுகளும் நடைபெற்றன.
நேற்று சனிக்கிழமை(17) நிகழ்வின் பிரதம அதிதியாகக் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அகமட் கலந்துசிறப்பித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
29 minute ago
2 hours ago