Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 07, திங்கட்கிழமை
Gavitha / 2016 ஒக்டோபர் 09 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஈழத்து முஸ்லிம் பெண் எழுத்தாளர் வரிசையில் கிழக்கின் காத்தான்குடியைச் சேர்ந்த 'காத்தான்குடி பரீதா' என்றழைக்கப்படும் மீராஸாஹிபு முஹம்மது பரீதா தனது 59 ஆவது வயதில் காலமானார்.
சமீப காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (09) காலமானார். இவர், 1958 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம்திகதி பிறந்தார். ஆசிரியராகவும், ஆசிரிய ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
'ஒரு பட்டிக்காட்டுப்பெண் பல்கலைகழகம் போகிறாள்', 'அன்புத் தெய்வம்', 'மூன்று முடிச்சு' ,'அவள் என்ன செய்வாள்', 'உனக்குள் ஒன்று உன்னைத் தேடு', 'நான் மௌத்தாகப்போகிறேன்' என்பன இவரது புகழ்பெற்ற சிறுகதைகளாகும்.
1981ஆம் ஆண்டு இவரது முதலாவது சிறுகதையான 'ஒரு பட்டிக்காட்டுப்பெண் பல்கலைக்கழகம் போகிறாள்' என்ற சிறுகதையானது தினகரன் பத்திரிகையில் வெளியானது.
'மின்மினி' என்ற புனைப்பெயரில், சமூக மடமைத்தனங்கள், அநீதிகள் பற்றி அவர் தேசிய நாளிதழ்களில் எழுதியுள்ளார். தனது 15 ஆவது வயதில், எழுத்துத்துறையில் ஆர்வம் கொண்டு, சமூகச் சித்திர எழுத்தாளராக, சிறுகதைகள், கவிதைகள் பலவற்றை தேசிய நாளிதழ்களுக்காக எழுதியுள்ளார்.
சுமார், 30 இற்கு மேற்பட்ட சிறுகதைகளையும், 40 இற்கு மேற்பட்ட கட்டுரைகளையும் ஏராளமான கவிதைகளையும் எழுதியுள்ள இவர், மாணவர்கள் இடருபடும் இடங்கள் பற்றிய குறிப்பொன்றையும் எழுதியுள்ளார். ஆனால், அந்நூல் வெளியிடப்படும் முன்னராகவே காலமாகிவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago