Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 10, வியாழக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 21 , பி.ப. 12:22 - 0 - 251
கவிஞர் ஈழவாணியின் முயற்சியில் வடிவமைக்கப்பட்டுள்ள “காப்பு” சிறுகதைத் தொகுதி வெளியீடு, சென்னை அரும்பாக்கம் லீ கிளப்பில், நடைபெற்றது.
இலங்கையில் கடந்த எண்பதாண்டுகளில் எழுத்துக்கலைஞர்களாக பரிணமித்த, பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற பெண் படைப்பாளர்களது கதைகளின் தொகுப்பாக ‘காப்பு’ வெளிவருகிறது.
கவிஞர் ஈழவாணியின் முயற்சியில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இத்தொகுப்பில் புதியவர்களின் படைப்புகளும் இடம்பெற்றுள்ளன.
ஆரம்ப காலம், போர்க்காலம், தற்போது என மூன்று காலங்களிலும் தமிழ், சிங்களம், மலையகம், புலம்பெயர்ந்த தேசம் என நான்கு பிரதேசங்களிலும் நிகழ்ந்தவற்றின், நிகழ்கின்றவற்றின் காலக் கண்ணாடிகளே ‘காப்பின்’ கதைகளாக அமைந்துள்ளன.
இந்நிகழ்வில், எழுத்தாளர்களான ஆனந்த விகடனின் உதவி ஆசிரியர் தமிழ் மகன், மனா பாஸ்கர்(தி இந்து தமிழ்) வெய்யில்(‘தடம்’ இதழ் துணை ஆசிரியர்) ஆகியோர் விமர்சன உரையாற்றினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .