2024 டிசெம்பர் 04, புதன்கிழமை

‘கலண்டரில் உட்காரும் புலி’

Editorial   / 2019 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

பொத்துவில் பட்டாம்பூச்சிகள் கலை இலக்கிய பரண் அமைப்பின் அனுசரணையுடன், கவிஞர் அஹமது பைசல் எழுதிய ‘கலண்டரில் உட்காரும் புலி’ எனும் கவிதை நூல் வெளியீடு, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில், நடைபெற்றது.  

பொத்துவில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.எம். அப்துல் மலிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொத்துவில் பிரதேசசபையின் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.   

நூலின் ஆய்வுரையை, ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ். முபாறக், அம்பாறை மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி கே. திலகேஸ்வரன் ஆகியோர் ஆற்றினர்.   

வெளியீட்டு​ைரயை பட்டாம்பூச்சிகள் கலை இலக்கிய பரண் அமைப்பின் பணிப்பாளர் கிராமத்தான் கலீபா நிகழ்த்தினார்.   

இந்நிகழ்வில், அதிபர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். நூலின் முதற் பிரதியை தொழிலதிபரும், இலக்கியப் புலவலருமான ஏ.நஸுறுதீன் பெற்றுக்கொண்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .