Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Kogilavani / 2017 நவம்பர் 20 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எழுத்தாளர் பாத்திமா ஸிமாரா அலியின் "கரையைத் தழுவும் அலைகள்" கவிதை நூல் வெளியீட்டு விழா, கொழும்பு -10 அல் ஹிதாயா பாடசாலை மண்டபத்தில், நேற்று (19) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு, நூலை வெளியிட்டு வைத்தார்.
இந்நிகழவில் கௌரவ அதிதிகளாக மேல் மாகாண சபை உறுப்பினர் பைறூஸ் ஹாஜி, பிரபல ஒலிபரப்பாளரும் கலைஞருமான பி.எச்.அப்துல் ஹமீதும் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நூலின் முதற் பிரதியை பிரபல தொழிலதிபர் பௌசுல் ஹமீத் பெற்றுக்கொண்டார். கவிஞர் அஷ்ரப் ஷிஹாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நூலின் நயவுரையை மேமன் கவியும் திருமதி புர்கான் பி இப்திகார் ஆகியோரும் வழங்கினர்.
எழுத்தாளர் முல்லை ரிஸானா கவி வாழ்த்தைப் பாடியதுடன் அவரது கணவர் நூலாசிரியருக்கு வாழ்த்துப் பத்திரத்தை வழங்கினார்.
மெட்ரோ நியூஸ் செய்தி ஆசிரியர் சித்தீக் காரியப்பர், மனித உரிமைச் செயற்பாட்டாளர் டீன் நூர் ஆகியோர், நூலின் சிறப்புப் பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .