2025 ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை

கலாநெஞ்சன் ஷாஜஹானுக்கு மூன்று முதலிடங்கள்

Super User   / 2013 செப்டெம்பர் 01 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு பிரதேச செயலகம் கலாசார அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து நடத்திய 2013ஆம் ஆண்டுக்கான நீர்கொழும்பு பிரதேச சாகித்திய விழாவிற்கான இலக்கியப் போட்டிகளில் ஊடகவியலாளரும் கவிஞரும் எழுத்தாளருமான கலாநெஞ்சன் ஷாஜஹானுக்கு மூன்று முதலிடங்கள் கிடைத்துள்ளன.

கவிதை, சிறுகதை மற்றும் பாடலாக்கம் ஆகிய திறந்த போட்டிகளிலேயே கலாநெஞ்சன் ஷாஜஹான் முதலிடங்களை பெற்றுள்ளார்.

இதேவேளை, கம்பஹா மாவட்;ட செயலகம் கலாசார அலுவல்கள் அமைச்சுடன் இணைந்து நடத்திய 2013ஆம் ஆண்டுக்கான கம்பஹா மாவட்ட சாகித்திய விழாவிற்கான இலக்கியப்  போட்டி நிகழ்ச்சிகளிலும் ஷாஜஹானுக்கு மூன்று இடங்கள் கிடைத்துள்ளன.

பாடலாக்கப் போட்டியில் முதலாமிடத்தையும் சிறுகதைப் போட்டியில் இரண்டாமிடத்தையும் கவிதைப் போட்டியில் மூன்றாமிடத்தையும் கம்பஹா மாவட்;ட சாகித்திய விழா போட்டிகளில் இவர் பெற்றுள்ளார்.

இவர் இரண்டு கவிதைத் தொகுதிகளையும் இஸ்லாமியப் பாடல் தொகுதிகள் இரண்டினையும் வெளியிட்டுள்ளதோடு பல்வேறு இலக்கியப் போட்டிகளில் தேசிய ரீதியில் பல பரிசில்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார். கல்வி முதுமாணி பட்டப் படிப்பை தொடரும் எம்.இஸட்.ஷாஜஹான் கொழும்பு ஹமீத் அல் ஹுசைனியா கல்லூரி, மருதானை ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X