Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Editorial / 2023 நவம்பர் 08 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவீன மற்றும் சமகாலக் கலைக்கான இலங்கை அருங்காட்சியகத்தின் (MMCA இலங்கை) ‘அந்நியர்’கண்காட்சி, கொழும்பு 3, கிறெஸ்கட் பொலவாட்டின் தரைத்தளத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் வெற்றிகரமாக ஆறு மாத கால ஓட்டத்திற்குப் பிறகு அக்டோபர் 22 அன்று நிறைவடைந்தது. இக் காட்சியானது நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள 489 மாணவர்கள் உட்பட 10,377 பார்வையாளர்களை ஈர்த்தது.
‘அந்நியர்’ கண்காட்சியின் தலைமை எடுத்தாளுனர் சந்தேவ் ஹன்டி கூறுகையில், “எனது நம்பிக்கை என்னவென்றால் இந்தக் கண்காட்சியானது சமகாலக்கலையின் பொருத்தப்பாடு பற்றிய விரிவான ஒரு உரையாடற் தொடரை ஆரம்பிப்பதற்கு உதவியது மட்டுமன்றி வெளிநாட்டுத் தன்மை, வினோதத்தன்மை, அந்நியத்தன்மை போன்றவற்றின் அனுபவங்கள் உண்மையில் எவ்வாறு நம் காலத்தின் பண்புகளை வரையறுக்கின்றன என நம்புகிறேன்,” என்றார். மேற்கொண்டு அவர், “இந்த கண்காட்சியானது, தேசியம் அல்லது பிற குறைப்பு வகைகளுடன் அடையாளத்தை இணைக்கும் நேர்த்தியான மற்றும் நேர்த்தியான முயற்சிகளுக்கு வெளியே இருக்கும் அல்லது வெளியேறும் அனுபவங்களுக்கு சாட்சியமளிக்கும் குரல்களின் ஒலியை அறிமுகப்படுத்தியது” எனக்கூறினார்.
இலங்கை, அமெரிக்கா, ஸ்வீடன், மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் வாழும் மற்றும் பணிபுரியும் 15 சமகால கலைஞர்களின் 19 புகைப்படங்கள், ஆற்றுகைகள், வீடியோ கலைப்படைப்புகள், ஸ்தாபனக்கலைகள், வரைபடங்கள் மற்றும் ஓவியங்களை ‘அந்நியர்’ காட்சிப்படுத்தியது. கலைஞர்களில் அர்ஜுன குணரத்ன (பி. 1976), தனுஷ்க மாரசிங்க (பி. 1985), டினால்கா லியனகே (பி. 1994), ஹேமா ஷிரோனி (பி. 1991), ஹானியா லுதுஃபி (பி. 1989), இமாத் மஜீத் (பி. 1991), ஜனனி குரே (பி. 1974), கே கே ஸ்ரீநாத் சதுரங்க (பி. 1987), நீனா மங்களநாயகம் (பி. 1980), ரெஜினோல்ட் எஸ். அலோய்ஷியஸ் (பி. 1970), எஸ். எச். சரத் (பி. 1947), ஷியாமா கோல்டன் (பி. 1983), ஸ்டீவன் சம்பியன் (பி. 1959), மற்றும் சுமுதி சுரவீர (பி. 1982) ஆகியோர் அடங்குவர்.
Music Matters ஐச் சேர்ந்த டினெல்க லியனகே (பி. 1994), ஹானியா லுதுஃபி (பி. 1989), மற்றும் சுமுதி சுரவீர (பி. 1982) ஆகியோரின் ‘வாசல்/ එළිපත්ත/ Threshold (Part 1)’ மற்றும் ‘வாசல்/ එළිපත්ත/ Threshold (Part 2)’ ஆகிய இரண்டு கலைப்படைப்புகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடன் 2021ம் ஆண்டில் MMCA இலங்கையினால் நியமிக்கப்பட்டன.
நீனா மங்களநாயகத்தின் ‘Lacuna’ (2009) மற்றும் ‘Balancing Act’ (2012) மற்றும் இமாத் மஜீத்தின் ‘the impossibility of leaving / the possibility of coming out’ (2022) ஆகிய இரண்டு படைப்புகளும் அக்டோபர் 12 அன்று லண்டனில் நடைபெற்ற MMCA இலங்கையின் முதலாவது சர்வதேச கலை நிகழ்வில் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு லண்டனின் Frieze Week உடன் (11–15 ஒக்டோபர் 2023) The Photographers’ Gallery லண்டனுடன் இணைந்து நடைபெற்றது. மேலும் தெரிவுசெய்யப்பட்ட இந்த விசேடமாக எடுத்தாளுகை செய்யப்பட்ட வீடியோ படைப்புகளைத் தொடர்ந்து ஒரு குழு விவாதமும் நடத்தப்பட்டது. “Frieze Week இல் லண்டனில் உள்ள The Photographers’ Gallery உடன் பங்காளிகளாகச் செயற்பட்டமை மிகவும் வெற்றிகரமாக இருந்தது. இந்நிகழ்வு விற்றுத் தீர்ந்ததுடன் கலைஞர்களின் திரைப்படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு எங்களின் எதிர்பார்ப்பையும் விஞ்சியது,” என MMCA இலங்கையின் தலைமை எடுத்தாளுனர் ஷர்மினி பெரேரா குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “லண்டனில் எங்களின் பணிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம், அத்துடன் நவீன மற்றும் சமகாலக் கலைக்கான புதிய அருங்காட்சியகம் ஒன்றை நிறுவுவதற்கான எமது திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் போது ஆதரவாளர்களில் புதிய பார்வையாளர்களைக் கண்டுபிடிக்க முடிந்தது.”
இந் நிகழ்வு சர்வதேச பார்வையாளர்களுக்கு ‘அந்நியர்’ கண்காட்சி தொடர்பாக புலப்பெயர்வு, தேசிய, குழு எல்லைகள் மற்றும் நாடுகடந்த அடையாளங்கள் பற்றிய பூகோளக் கருத்தாடல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பையும் வழங்கியது. இது தொடர்பாக ஹன்டி குறிப்பிடுகையில், “‘அந்நியர்’ கண்காட்சியை ஆரம்பித்த உடனேயே அது வெற்றிகரமாக நகர்ந்ததையே நாங்கள் எப்போதுமே அவதானிக்க முடிந்தது. அத்துடன் MMCA இலங்கை ஒரு நிறுவனமாக இருப்பதையும் இந்த தீவிலிருப்போர் அல்லது அதனுடன் இணைந்திருக்கும் அனைவரும் மிக முக்கியமாக எல்லைகளால் பிரிக்கப்பட்ட ஒரு அடுக்கமைவானதும் விலக்கமானதுமான உலகத்தை கணக்கிடும் வகை என்பவற்றையும் கருத்திலெடுக்கையில் இது மிகப்பெரிய உலகளாவிய உரையாடலின் ஆரம்பம் மட்டுமே,” எனக் குறிப்பிட்டார்.
கண்காட்சிகளுடன் இணைந்து அதன் பொது நிரலாக்கத்தின் ஒரு பகுதியாக, அருங்காட்சியகமானது 9 கலரி உரையாடல், 8 பயிற்சிப்பட்டறைகள், 5 வாசிப்பு குழுக்கள், 11 எடுத்தாளுனரின் சுற்றுப்பயணங்கள், வருகைக் கல்வியாளர்களின் 22 கண்காட்சி சுற்றுப்பயணங்கள், 3 ஆற்றுகைகள், குழந்தைகளுக்கான புத்தக வாசிப்பு உட்பட்ட நிகழ்வுகளை எடுத்தாளுகை செய்தது. அத்துடன் தனுஷ்கா மாரசிங்க மற்றும் கே கே ஸ்றீநாத் சதுரங்கவின் ஆற்றுகையான ‘Text-ing-Be-ing’ (2019) ‘அந்நியர்’ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது.
ஒரு முழு கண்காட்சியை ஒழுங்குபடுத்தி ஆறு மாதங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு திறந்து வைப்பது கடும் பிரயத்தனச் செயல். MMCA இலங்கையின் தனது அணிக்கு நன்றியைத் தெரிவித்த ஹன்டி, “இந்தக் கண்காட்சியைத் திரும்பிப் பார்க்கும்போது MMCA இலங்கையைச் சேர்ந்த எனது சக ஊழியர்களை நான் குறிப்பாக அடையாளம் காண விரும்புகிறேன். இவர்கள் இருவருட காலப்பகுதியில் இந்த முக்கிய கண்காட்சியை சலிப்படையாது உயிர்ப்பாக வைத்திருக்க உதவினர். கட்டடக்கலைஞர் ஜொனதன் எட்வட் கண்காட்சி வெளிக்கான வடிவமைப்பில் கவனமாகவும் பரிசீலிக்கப்பட்ட அணுகுமுறையையும் மேம்படுத்துவதற்காக எம்முடன் இணைந்தார். எங்கள் குழு உறுப்பினர்களில் செயற்பாடுகளின் முகாமையாளர் மல்ஷானி டெல்கஹபிடிய செயற்பாடுகளின் அனைத்து சிக்கலான விடயங்கள், பொதிகளை கடல்கடந்து அனுப்புதல் போன்றவற்றைத் தங்கு தடையின்றி மேற்கொண்டார். மேலும் பதிப்பு உதவியாளர் கௌமதி ஜெயவீர மற்றும் அவரது அருங்காட்சியக இணைக்குழுவினர் பதிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு பணிகளை மேற்கொண்டனர், அப்பணிகள் கண்காட்சிதோறும் காணப்பட்ட எழுத்துகளைத் தயாரிப்பதற்கு உதவியது,” எனக் கூறினார்.
“கல்விக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கமான எடுத்தாளுனரான பிரமோதா வீரசேகர மற்றும் அவரது குழுவினர் விரிவான அனுபவத்துடன் பரந்தளவினாலான பார்வையாளர்கள் கலந்துகொள்ளும் வகையில் நிகழ்ச்சித் தொடரை உருவாக்கியுள்ளனர். எங்கள் கலரி மேலாளர் தாரிக் தாஹிரீன், மிகச்சிறப்பான ஒரு வருகை கல்வியாளர் குழுவுடன் சேர்ந்து, MMCA Afterschool நிகழ்ச்சி உட்பட பல நிகழ்வுகளை ஒரே சமயத்தில் கையாண்டபடி உள்ளே வரும் ஒவ்வொரு பார்வையாளர்களையும் எப்போதுமே ஆர்வத்துடன் வரவேற்றுப் பேசினார்.” அவர் மேலும் கூறுகையில், “ஏனைய எங்கள் அனைவரையும் போலவே இந்த கண்காட்சியும் பெயரிட முடியாத அளவுக்கு பல தனிநபர்களின் ஆதரவு பெறப்பட்டது. மக்களின் பயிற்சி, அங்கீகாரம் மற்றும் ஆதரவில் முதலீடு செய்வதன் மூலம் பொது நலனுக்காக ஒரு நிறுவனத்தையும் அதன் மூலம் ஒரு உட்கட்டமைப்பையும் உருவாக்குவது இதுதான் என்று நான் நினைக்கிறேன்,” என ஹன்டி மேலும் தெரிவித்தார்.
‘அந்நியர்’ க்கான அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெருந்தன்மையான ஆதரவுடன் சாத்தியமானது. அதே நேரம்,'அந்நியர் ' கண்காட்சியானது அனோஜி அமரசிங்க, ஹியூஸ் மார்ச்சந்த், ராதிகா சோப்ரா, மற்றும் ராஜன் ஆனந்தன் ஆகியோருடன் MMCA இலங்கையின் ஸ்தாபக புரவலர்கள், பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் லைட்87 போன்றோருடன் சேர்ந்து மேலதிக ஆதரவையும் பெற்றது. அருங்காட்சியகத்தின் முக்கிய பயனாளிகள் மற்றும் நிதியளிப்பவர்களான ஜோன் கீல்ஸ் ஸ்தாபனம், நேசன் ட்ரஸ்ட் வங்கி மற்றும் பெயார் வெர்ஸ்ட் இன்சூரன்ஸ் மூலமும் பெரியளவிலான ஆதரவு கிடைக்கப்பெற்றது.
நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகம் (MMCA இலங்கை), கல்வியை முதன்மைப்படுத்தும் ஒரு முன்முயற்சியாகும். பொதுமக்கள், பாடசாலைகள், மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் மற்றும் இன்பத்திற்காக, நவீன மற்றும் சமகால கலைகளின் காட்சி, ஆராய்ச்சி, சேகரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பொது அருங்காட்சியகத்தை நிறுவுவதே இதன் நோக்கமாக உள்ளது. அருங்காட்சியகம், அதன் கண்காட்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை அவர்களின் இணையதளமான www.mmca-srilanka.org இல் அல்லது முகநூலில் facebook.com/mmcasrilanka மற்றும் இன்ஸ்டகிராமில் instagram.com/mmcasrilanka/ பார்த்து அறியலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago