2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

7ஆயிரம் போதை குளிசைகள் மீட்பு

Mayu   / 2024 மே 16 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் - கற்பிட்டி பகுதியில்  வீடொன்றிலிருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7ஆயிரம் போதை குளிசைகளுடன் புதன்கிழமை (15) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் மருந்தகமொன்றில் கடமைபுரிந்து வந்த 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்அடிப்படையில்  குறித்த வீட்டை சோதனை செய்த போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உறங்கும் அறையில் மீன்பிடி வலைகளுக்குள் மறைத்து வைத்திருந்த நிலையில் 58 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 7000 போதை குளிசைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த போதை மாத்திரைகள் கொழும்பில் இருந்து கற்பிட்டிக்கு கொண்டுவரப்பட்டதாகவும், மாத்திரையொன்று 300 ரூபாவுக்கு விற்பனை செய்வதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .