2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

685 போதை குளிசைகளுடன்: 22 வயதுடைய நபர் கைது

Mayu   / 2023 டிசெம்பர் 10 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்பு மாணவர்கள் உட்பட நகருக்கு வரும் இளைஞர், யுவதிகளை இலக்குவைத்து  போதைப்பொருளை  விற்பனை செய்த தனியார் மருந்தக ஊழியர் ஒருரை போதைப்பொருள் குளிசைகளுடன் கைது செய்துள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

 கைது செய்யப்பட்டவர், அனுராதபுரம் திஹியாகம சந்திக்கு அருகில் அமைந்துள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த 22 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபரை கைது செய்த போது, அவரிடம் இருந்து 685 குளிசைகள் கைப்பற்றப்பட்டதாகவும்  அவை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே நோயாளிகளுக்கு வழங்கப்படுவதாகவும், அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது போதையை ஏற்படுத்துவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .