2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

30 ஆயிரம் மெற்றிக்தொன் கனியமணல் சீனாவுக்கு ஏற்றுமதி

Freelancer   / 2023 செப்டெம்பர் 04 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை துறைமுகத்தில் இருந்து 30 ஆயிரம் மெற்றிக்தொன் கனியமணல் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிக பெறுமதிகொண்ட பெருமளவான கனியமணல் இது என இலங்கை கனிப்பொருள் மணல் நிறுவனம் தெரிவிக்கின்றது. இலங்கை கனிப்பொருள் மணல் நிறுவனம் மேற்கொண்ட சர்வதேச கேள்வி மனுக்கோரல் ஊடாக விலைகூறல்களைச் சமர்ப்பித்திருந்த ஐந்து நிறுவனங்களில் இருந்து சீன நிறுவனம் ஒன்று தெரிவு செய்யட்டிருந்தது.

சீன நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக புத்தளம் இல்மனைற் நிறுவனம் நியமிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்ரூபவ் திருகோணமலை துறைமுகத்தின் அஷ்ரப் இறங்கு துறையில் இருந்து கனியமணலை கப்பலேற்றும் நடவடிக்கைகள் கடந்த வாரம் இடம்பெற்றது.

புத்தளம் இல்மனைட் நிறுவனத்தின் பொது முகாமையாளரும் கனிம அகழ்வுத் துறை நிபுணருமான றையன் ரொக்வூட் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்: 

நமது நாடு வழமையாக இறக்குமதிகளையே மேற்கொள்கின்றது ஆனால் இப்போது எமது நாட்டிலேயே அகழப்பட் கனியமணலை ஏற்றுமதி செய்கின்றோம். இது சிறப்புவாய்ந்த ஏற்றுமதியாகும்.

ஏனெனில் இதன்மூலம் பல மில்லியன் அமரிக்க டொலர் அந்நியச் செலாவணி இலங்கைக்கு கிடைக்கும். நாட்டின் டொலர் பிரச்சினையை தீர்ப்பதற்கு இது உதவும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .