2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

18 T56 தோட்டாக்கள் மற்றும் 20 கி.கி கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது

Mayu   / 2023 டிசெம்பர் 19 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் நேற்றைய தினம் (18) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 18 T56 தோட்டாக்கள் மற்றும் 20 கி.கிராம் உலர் கஞ்சாவை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் சியம்பலாண்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 43 வயதுடைய சமகிபுர பகுதியை ​சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேக நபரை சியம்பலாண்டுவ நீதவான் நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமணசிறி குணதிலக்க

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .