Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Janu / 2023 செப்டெம்பர் 03 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆகஸ்ட் 28, 2023 திங்கட்கிழமை முதல், வட அமெரிக்கா, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில், தமிழ் வகுப்புகள் முறையாக தொடங்கியது. ஐ.சி.சி.ஆர் மூலமாக முனைவர் த.விஜயலக்ஷ்மி அவர்கள் இந்தியாவிலிருந்து வருகை புரிந்துள்ளார்.
தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு மையம் மூலம் பத்து மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தமிழ் இருக்கை தலைவர் திரு. சாம் சொக்கலிங்கம் கண்ணப்பன் வரவேற்பு தெரிவித்தார். இந்திய தூதரக அதிகாரி திரு. மஞ்சுநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் இந்திய கலாச்சாரம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள முடியும் என்று கூறினார். பல்கலைக்கழக டீன் ஓ. கானர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முனைவர் த.விஜயலக்ஷ்மி அவர்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கியதற்காக நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மாடர்ன் மற்றும் கிளாசிகல் மொழி இயக்குனர் முனைவர் இம்ரான், இந்தியா ஸ்டடிஸ் இயக்குனர், முனைவர். சரசிஜ் மஜூம்தார், முதன்மை கல்வி அலுவலர் முனைவர். மைக்கேல் ஜான்சன், பல்கலைக்கழக வேந்தர், முனைவர். ரேணு கத்தோர், ஹூஸ்டன் தமிழ் இருக்கை இயக்குநர், திரு. கால்டுவெல் வேள்நம்பி, செயலாளர் திரு. பெருமாள் அண்ணாமலை, எனர்ஜி துறை துணை தலைவர் இயக்குனர், முனைவர். ரமணன் கிருஷ்ணமூர்த்தி, இயக்குநர், முனைவர். ராதா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
15 minute ago
40 minute ago