2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வைத்தியசாலையில் இருந்து தப்பியோடிய கான்ஸ்டபிள்

Janu   / 2023 டிசெம்பர் 26 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி,  தளுவ - நிர்மலாபுர பிரதேசத்தில் நத்தார் விருந்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்குள்ளகியதாக தெரியவந்துள்ளது.  

குறித்த புதிய பொலிஸ் கான்ஸ்டபிள் திங்கட்கிழமை (25)  இரவு தனது நண்பர்கள் சிலருடன் கலந்து கொண்ட  விருந்தின்போது,  குழுக்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள வாக்குவாதம் முற்றிய நிலையில், அங்கிருந்த சிலர் பொலிஸ் கான்ஸ்டபிளையும் அவருடன் வந்த நண்பர்களையும் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுபற்றி நுரைச்சோலை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் குழு, தாக்குதலுக்கு உள்ளான புதிய பொலிஸ் கான்ஸ்டபிளை சிகிச்சைக்காக  வைத்திசாலையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர், வைத்தியசாலையில் இருந்து அவர் தப்பிச் சென்றுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரஸீன் ரஸ்மின்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .