2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

Janu   / 2023 டிசெம்பர் 11 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டுபாயில் இருந்து ஓமன் வந்த, கம்பளை - புஸ்ஸல்லாவ பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய வர்த்தகர் ஒருவர் திங்கட்கிழமை (11)  அதிகாலை 03.30 மணியளவில் சலாம் எயார் விமானம் OV-437 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

குறித்த நபரை சோதனையிட்டபோது, அவர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளிலிருந்து சுமார் 22 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான "மென்செஸ்டர்" வகையைச் சேர்ந்த வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 114 சிகரெட் பொதிகளை மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அடிக்கடி வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டு வருபவர் என விசாரணையில் தெரியவந்துள்ளதுடன்,

இச்சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஸீன் ரஸ்மின்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .