2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

Janu   / 2024 மே 09 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் 15 இலட்சம் பெறுமதியான  வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை இலங்கைக்கு கொண்டு வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது  செய்யப்பட்டுள்ளனர் .

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட  860, 000 ரூபாய் பெறுமதியான 8,600  சிகரெட்டுகள் அடங்கிய 43 அட்டைப்பெட்டிகளுடன்  ஓமானின் மஸ்கட்டில் இருந்து விமான நிலையத்திற்கு வந்த  பரகடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய  ஒருவரும் , 640,000 ரூபாய் பெறுமதியான 6,400  சிகரெட்டுகள் அடங்கிய 32 சிகரெட் அட்டைப் பெட்டிகளுடன் டுபாயில் இருந்து வந்த கொழும்பு-14, நாகலகம் பிரதேசத்தை  சேர்ந்த 29 வயதுடைய ஒருவருமே இவ்வாறு  கைது  செய்யப்பட்டுள்ளனர் .

மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .