2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வந்தவர் சிக்கினார்

Janu   / 2024 டிசெம்பர் 30 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 59 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  விமான நிலைய சுங்க அதிகாரிகளால் திங்கட்கிழமை  (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் துபாயிலிருந்து காலை 08.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன் இதன்போது விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 39,800 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 199 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான  மேலதிக  விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

டீ.கே.ஜி கபில

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X