2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

Janu   / 2024 டிசெம்பர் 08 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாதம்பை பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி மற்றும் பல வகையான மட்டிகளுடன்   ஒருவர் ஞாயிற்றுக்கிமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் வலம்புரி சங்கு மற்றும் ஒருதொகை மட்டிகள்  இருப்பதாக  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், இலங்கை விமானப்படையின் புலனாய்வு அதிகாரிகளின் இதனை உறுதிப்படுத்தியதன் பின்னர், குறித்த பொருட்களை சந்தேக நபரிடமிருந்து கொள்வனவு செய்யும் நோக்கில் தம்மால் நியமிக்கப்பட்ட முகவர்களை வைத்து  மாதம்பே பிரதேசத்தில் சந்தேக நபரை கைது  செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து விற்பனை செய்வது மற்றும் தம் வசம் வைத்திருப்பதற்கு தடைசெய்யப்பட்ட KING CONCH SEASHELL வகையைச் சேர்ந்த மட்டிகளும், CHIRAGA SPIDER CONEH வகையைச் சேர்ந்த வலம்பரி சங்கு ஒன்றும், இன்னும் சில மட்டிகளும் (நத்தை) காணப்பட்டதாக இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து அவர் பயணித்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட  வலம்புரி சங்கு உட்பட மட்டிகள் , மோட்டார் சைக்கிள் என்பன மேலதிக விசாரணைகளுக்காக ஆனவிழுன்தாவ வனவிலங்கு காரியாலய உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரஸீன் ரஸ்மின்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .