2024 டிசெம்பர் 27, வெள்ளிக்கிழமை

வருடாந்த உற்பத்தி கண்காட்சியும் விற்பனையும்

Editorial   / 2024 டிசெம்பர் 02 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் மகளிர் தொழில் வல்லமை இயக்கம்  அமைப்பின் (Association of Muslim Women Professional and Entrepreneurs) வருடாந்த  உற்பத்தி கண்காட்சியும் விற்பனையும் தெஹிவளை மாநகர சபையின் மண்டபத்தில் திங்கட்கிழமை (02) இவ் அமைப்பின்  தலைவி  கரிமா சித்தீக் தலைமையில் நடைபெற்றது.  நடைபெற்றது.

இந்நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக பிரதம அதிதியாக பிரதி சபாநாயகர்  டாக்டர் றியாஸ் சாலிஹ் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இவ் அமைப்பானது கொழும்பில் உள்ள முஸ்லிம் பெண்கள் வைத்தியர், சட்டத்தரணி கல்லூரி அதிபர்கள் இணைந்து ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும் கடந்த 15 வருடங்களாக கொழும்பில் இயங்கும் இந்த அமைப்பின்  கல்வி, சமுக சேவைகளில் ஈடுபடுகின்றது.

ஆரம்பத் தலைவிகளான முன்னாள் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியின் அதிபர் பளிலா ஜூரம்பதி, ஷானாஸ் ரவுப் ஹக்கீம் போன்றோர் ஆரம்பித்து வைத்தார் 

இம் மகளிர்கள் தமது சுய தொழில் முயற்சியில் ஈடுபட்டு அவர்கள் உற்பத்திப் பொருட்களை சந்தை படுத்தும் முகமாக வருடாந்த விற்பனைக் கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இந்தநிதி வறிய மாணவர்களுக்கு கல்வி, சமுக சேவைகளுக்கு வழங்கப்படுகின்றது. .

இந்நிகழ்விற்கு கௌரவ அதிதியாக வர்த்தகர்கள் மாஹிர் ஹசன்,  எம்.எம். ஜெமீல்  சாரஸ் தாவுத், இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்தின் முஸ்லிம் சேவை பிரதிப் பணிப்பாளர் றிநோசியா உட்பட அந்த அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

அஷ்ரப் ஏ சமத்

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .