2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

ரூ.5 கோடி பெறுமதியான ​அலைபேசிகள் மீட்பு

Mayu   / 2024 மே 19 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி கபில

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் பென் டிரைவ்கள் ஆகியவற்றுடன் இரண்டு வர்த்தகர்கள் வௌ்ளிக்கிழமை (17) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில்  சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் பென் டிரைவ்கள் விமான நிலையத்திற்கு கொண்டு வந்த நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரொருவர் கொழும்பு-12 பகுதியை சேர்ந்த 59 வயதுடையவர் எனவும்  மற்றைய நபர்  கொழும்பு - 14 சேர்ந்த 24 வயதுடையவர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் துபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அவர்கள் கொண்டு வந்த சில பயணப்பைகளில் ஆப்பிள், கேலக்ஸி, ரெட் மீ, ஹீரோ மற்றும் ஒன் பிளஸ் வகையைச் சேர்ந்த 1,083 லேட்டஸ்ட் மொபைல் போன்கள் மற்றும் 200 பென் டிரைவ்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

மேலதிக விசாரணைகளுக்காக கையடக்க தொலைபேசிகள் மற்றும் பென் டிரைவ்களை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .