Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 ஜூலை 10 , பி.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019 இற்குப் பிறகு இலங்கையில் முதன்முறையாக ஏழு பெரிய மாநாடுகளை யெகோவாவின் சாட்சிகள் நேரடியாக நடத்துகிறார்கள்.
உலகம் முழுவதும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் சுமார் நூறு வருடங்களுக்கும் மேலாக விளையாட்டரங்குகளிலும் மண்டபங்களிலும் திரையரங்குகளிலும் மாநாடுகளை நடத்தி வருகின்றார்கள். இருந்தாலும் 2020ல் பரவிய கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நேரடியாக நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பின்பு 2022ல் சிறிய அளவிலான கூட்டங்களும் வீட்டுக்கு வீடு ஊழியமும் மறுபடியும் நேரடியாக ஆரம்பிக்கப்பட்டன. ஆகவே பெருந்தொற்றுக்கு பின்னர் இந்த வருடம் முதல் முறையாக உலகம் முழுவதும் பிரமாண்டமான அளவில் மாநாடுகளை நேரில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“பொறுமையோடு இருங்கள்”! என்ற தலைப்பிலான சுமார் 6000 மாநாடுகள் உலகின் பல பாகங்களில் நடைபெறும். இலங்கையில் மொத்தமாக ஏழு மாநாடுகள் நடைபெற உள்ளன. இந்த மாநாட்டு நிகழ்ச்சிகள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் ஆறு பாகங்களாக இடம்பெறும். இவை ஒவ்வொன்றும் பொறுமை என்ற குணத்தைப் பற்றியும், இன்று எம் வாழ்வில் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப்பற்றியும் நடைமுறையான ஆலோசனைகள் பைபிளில் இருந்து வழங்கப்படும். சனிக்கிழமை காலை நிகழ்ச்சியின் முடிவில் முழுக்காட்டுதல் இடம்பெறும். அத்துடன் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட இரண்டு பாகங்களை கொண்ட ஒரு வீடியோ நாடகம், சனி மற்றும் ஞாயிறு மாலை நிகழ்ச்சிகளில் போட்டுக் காட்டப்படும்.
“வீடியோ மூலமாக தரமான மாநாடுகளை நாம் மிகவும் சௌகரியமாக அனுபவித்தது என்னவோ உண்மைதான், ஆனாலும் நேரடியாக பலருடன் ஒன்றுகூடி மாநாட்டை அனுபவிப்பதை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது” என்கிறார் இலங்கைக்கான யெகோவாவின் சாட்சிகளின் ஊடகப் பேச்சாளர் நலின் வணிகசேகர. மேலும் அவர் கூறுவதாவது, “ஆன்லைனில் நடத்தப்பட்ட மாநாடுகளில் உலகெங்கிலும் உள்ள பல லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். மேலும், தொற்று பரவாமல் பாதுகாக்கவும் இவ் ஏற்பாடு உதவியது, ஆனாலும் எம் நண்பர்களுடன் நேரில் ஒன்றுகூடி மாநாடுகளை அனுபவிக்க ஏக்கத்துடன் காத்திருக்கின்றோம்.”
இலங்கையில் இம்மாநாட்டை ஜூலை, ஓகஸ்ட் மற்றும் செம்படம்பர் மாதங்களில் நடத்தவுள்ளோம்:
நடைபெறும் இடம் |
திகதி |
மொழி |
சுகததாச உள்ளக விளையாட்டரங்கு |
14-16 ஜூலை |
சிங்களம் |
க்ளோவர் பன்குவட் ஹோல் – களனி |
28-30 ஜூலை |
தமிழ் |
நோர்த் ஷோர் கேட்போர் கூடம் -மட்டக்குளி |
21-23 ஜூலை |
ஆங்கிலம் |
கிரீன் வேலி ஹோட்டல் |
4-6 ஓகஸ்ட் |
சிங்களம் |
சிலாபம் பா(f) இன் |
11-13 ஓகஸ்ட் |
சிங்களம் |
இராஜேஸ்வரி மண்டபம் -தெல்லிப்பளை |
18-20 ஓகஸ்ட் |
தமிழ் |
இராஜேஸ்வரி மண்டபம் -தெல்லிப்பளை |
22-24 செம்படம்பர் |
தமிழ் |
இம்மாநாட்டில் அனைவரும் கலந்கொள்ளலாம். அனுமதி முற்றிலும் இலவசம்.இந்நிகழ்ச்சி பற்றி மேலதிக தகவல்களையும், வேறு எங்கே எப்போது இம்மாநாடு நடைபெறும் என்பதையும் அறிந்து கொள்ள, jw.org இணையத்தளத்தில் “எங்களைப் பற்றி “ என்ற பகுதியில் பாருங்க
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago