2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

யானையை கண்டு அச்சமடைந்தவர் விபத்தில் பலி

Janu   / 2024 ஜூன் 30 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 7ஆம் கட்டைப் பகுதியில் வைத்து, அனுராதபுத்தில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த முச்சக்கரவண்டி ஒன்றும், புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் ஒன்றும் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது .

விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியான , இராஜாங்கனை - சோலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் .

காட்டு யானையொன்று பிரதான வீதியை கடக்க முற்பட்ட போது,  அதனைக் கண்டு அச்சமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உடனடியாக முச்சக்கர வண்டியை திருப்ப முற்பட்டுள்ளார் இதன்போது, அனுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் மீது, முச்சக்கர வண்டி மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது .

விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதியை கைது செய்த கருவலகஸ்வெவ பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரஸீன் ரஸ்மின்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .