Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 02 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் தேசமான்ய பேராசிரியர். வெலிகமகே டொன் லக்ஷ்மன் மற்றும் திருமதி. கல்யாணி சிரிசீலி லக்ஷ்மன் ஆகியோருக்கு ஜப்பானிய அரசாங்கத்தின் உயர் கௌரவிப்பான “The Order of the Rising Sun” வழங்கப்படுவது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தரும், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருமான தேசமான்ய பேராசிரியர். வெலிகமகே டொன் லக்ஷ்மன், ஜப்பானிய கற்கைகள் நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கையில் ஊக்குவித்திருந்ததுடன், சில ஜப்பானிய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு நிலையங்களுக்கு விஜயம் செய்யும் பட்டம் பெற்றவர் எனும் வகையில் கற்பித்தல் மற்றும் இணைந்த ஆய்வுகளை முன்னெடுப்பது போன்றவற்றினூடாக கல்விசார் ஈடுபாடுகளை மேம்படுத்தியிருந்தார். இலங்கையின் முதலாவது பிராந்திய கற்கைத் திட்டமாக, 1987 ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயர் கற்கைகள் பீடத்தில் ஜப்பானிய கற்கைகள் மாஸ்டர்ஸ் கற்கையை இவர் நிறுவியிருந்தார். இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவுகளின் 50 வருட பூர்த்தியை முன்னிட்டு, கொழும்பு பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்டிருந்த நினைவேட்டின் மேற்பார்வைகளை இவர் மேற்கொண்டிருந்தார். பல ஜப்பானிய பல்கலைக்கழகங்களுடனான ஒன்றிணைந்த செயற்பாட்டை பேராசிரியர் லக்ஷ்மன் ஊக்குவித்திருந்தார்.
ஜப்பானில் தமது கணவருடன் தங்கியிருந்த காலப்பகுதியில் ஜப்பானிய மொழியில் தேர்ச்சி பெற்ற திருமதி கல்யாணி சிரிசீலி லக்ஷ்மன், தமது கணவர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு.டி. லக்ஷ்மன் உடன் இணைந்து, இலங்கையில் உயர் கல்விப் பாடவிதானத்தில் ஜப்பானிய மொழியை உள்வாங்கும் திட்டத்தை அறிமுகம் செய்திருந்தார். தேவி பாலிகா வித்தியாலயம், லின்ட்சே பெண்கள் உயர் பாடசாலை மற்றும் யசோதரா தேவி பாலிகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் இதில் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன், ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜப்பானிய மொழி கற்பித்தல் நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்திருந்தார். ஜப்பானிய கலாசாரம் பற்றி நன்கு பரீட்சியமான திருமதி. லக்ஷ்மன், தேவி பாலிகா வித்தியாலயத்தில் தாம் அதிபராக கடமையாற்றிய காலப்பகுதியில், கராதே வகுப்புகள், 5s கட்டமைப்பு மற்றும் “ஜப்பானிய தினம்” ஆகியவற்றை அறிமுகம் செய்திருந்தார். ஜப்பானுடனான தமது நீண்ட உறவுடன், இரு நாடுகளுக்குமிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
9 hours ago