Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 பெப்ரவரி 05, புதன்கிழமை
Editorial / 2025 ஜனவரி 10 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவீன மற்றும் சமகாலக் கலைக்கான இலங்கைஅருங்காட்சியகம் (MMCA இலங்கை) ஆனது ‘முழுநிலஅமைப்பு’ எனும் கண்காட்சியின்இரண்டாவதுசுழற்சியை டிசம்பர் 15 ஆம் திகதி அன்று திறந்து வைத்தது. சந்தேவ்ஹன்டி மற்றும் தினால் சஜீவ ஆகியோரால் எடுத்தாளப்பட்ட இந்தக் கண்காட்சியானது, இலங்கையில் நிலப்பரப்புகள் மாற்றமடைந்துள்ள பரந்த, சடுதியான, கிளர்த்தும்பாங்கான வழிகளைஆராய்கிறது.
‘முழுநிலஅமைப்பு’ கண்காட்சியின் இரண்டாவது சுழற்சி இலங்கையைச் சேர்ந்த ஒன்பது சமகால கலைஞர்களின் படைப்புக்களை காட்சிப்படுத்துகிறது. அவர்களில் அப்துல்ஹாலிக்அஸீஸ் (பி.1985), சந்திரகுப்த தேனுவர (பி.1960), தனுஷ்க மாரசிங்க (பி.1985), டொமினிக்சன்சோனி (இ.1956), ஜாஸ்மின் நிலானி ஜோசப் (பி.1990), கோரலேகெதர புஷ்பகுமார (பி.1968), பாலபொ(த்)துபிட்டிய (பி.1972), பிரதீப் தலவத்த (பி.1979), மற்றும் தா. சனாதனன் (பி.1969) ஆகியோர் அடங்குவர்.
MMCA இலங்கையின் சிரேஷ்ட எடுத்தாள ர் ஹேண்டி இதுபற்றிகூறுகையில்,
“கலைஞர்கள் நீண்டகாலமாக அதிகாரத்தை—அது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதை நிலைநாட்டப்பயன்படுத்தப்படும் கருவிகளை – ஆராய்ந்து வந்துள்ளனர். சமகால கலைஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.”என்றார். அத்துடன், “எல்லைகள், அணுகல் மற்றும் நிலத்தின்மீதானஅதிகாரம் பற்றிய கேள்விகள் அவசரமுறையில் எதிர்கொள்ளப்படும் இந்த காலகட்டத்தில், ‘முழுநிலஅமைப்பு’ என்ற கண்காட்சியின் இரண்டாவதுசுழற்சி, நிலத்துடனான நமது உறவு எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை நுணுக்கமாகஆராய்கிறது.” எனதெரிவித்தார்.
அவர்மேலும், “இந்தச்சுழற்சியில் உள்ளகலைப் படைப்புகளானவை, நிலம் எவ்வாறு உரிமை கோரப்படுகிறது, குறியிடப்படுகிறது மற்றும் யாருக்கு அணுகல் உள்ளது, யார் விலக்கப்படுகிறார்கள், யாருடைய வரலாறுகள் தெரியும்படி செய்யப்படுகிறது என்பதைத் தீர்மானிப்பதில் போட்டிக்குள்ளாகிறது போன்றவற்றை வழிநடத்தும் அன்றாட படவுருக்கள், வரைபடங்கள், ஆவணங்கள் மற்றும் தடையரண்களின் பங்கை எடுத்துக்காட்டுகின்றன” எனக் கூறினார்.
மூன்று சுழற்சிகளாக எட்டுமாதகாலப்பகுதியில் திறக்கப்படும் ‘முழுநிலஅமைப்பு’ கண்காட்சியானது, மரபார்ந்த நிலக்காட்சி சித்தரிப்புகளுக்கு அப்பாற் சென்று படைப்புகளை உருவாக்கியுள்ள 29 சமகால கலைஞர்களின்படைப்புகளைஒன்றிணைக்கிறது. மாறாக, இந்தக் கலைஞர்களின் படைப்புகள், நிலம் பற்றிய புரிதல்கள் எவ்வாறெல்லாம் கட்டமைக்கப்பட்டுள்ளன மற்றும் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளன என்பதை பதிவு செய்கின்றன.
‘முழுநிலஅமைப்பு’ என்பது நிலத்துடனான நமது உறவுகளை முற்றிலும் மறுபரிசீலனை செய்யும் வகையில் மாறிவரும் காட்சிகளின்தொடராகவிரிகிறது. ‘முழுநிலஅமைப்பு’ கண்காட்சியின் இரண்டாவது சுழற்சி 2025 மார்ச் 2 வரை பொது மக்களின்பார்வைக்காக திறந்திருக்கும். கண்காட்சிக்கான நுழைவு இலவசம். அருங்காட்சியகம் கொழும்பு 3 இல் உள்ள கிரெஸ்கட் புலவார்டின் தரைத்தளத்தில் அமைந்துள்ளது.
“‘முழுநிலஅமைப்பு’ கண்காட்சியின் இரண்டாவது சுழற்சி ஒளிப்படங்கள் மற்றும் ஓவியங்கள் முதல் சிற்பங்கள் மற்றும் நிறுவலாக்கங்கள் வரையிலானபடைப்புக்களின்புதியதேர்வுகளை அறிமுகப்படுத்தும். தனுஷ்கமாரசிங்கவின் ‘Walk(er)’ வயல் நிறுவலாக்கம் மட்டுமே முதலாவது சுழற்சியிலிருந்து எடுத்துவரப்பட்ட ஒரே படைப்பாகும்” என சஜீவ கூறினார். “இந்த சுழற்சியில் பார்வையாளர்களுக்கு ஈடுபாட்டு அனுபவத்தை வழங்குவதில் உறுதியளிக்கின்ற மூன்று ஊடாடும் கலைப்படைப்புகள் உள்ளன” என அவர் மேலும் குறிப்பிட்டார். இவ் ஊடாடும் படைப்புகளில் பிரதீப் தலவத்தவின் முதல் முறையாக காட்சிப்படுத்தப்படுகின்ற ‘You came to see me, and now I'm here’ (2023), மற்றும்தா. சனாதனனின் ‘Drawers of War Transactions’ (2019) ஆகியவை அடங்குகின்றன.
‘முழுநிலஅமைப்பு’ ஆனது முக்கிய கண்காட்சி ஆதரவாளர்களான அட்வென்ட்ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் பயனுறுதிமிக்க வகையில் பிணக்கைத் தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் (SEDR) செயல்திட்டத்தினால் மனமுவந்து ஆதரிக்கப்படுகிறது. Foto Design and Lego International மேலதிக ஆதரவை வழங்குகிறது, அவர்களுடன் எமது வானொலிபங்காளராக Yes FM இணைகிறது. அருங்காட்சியகம் அதன் முக்கிய அறக்கொடையாளரான ஜோன்கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் கண்காட்சிகள் உட்பட அதன் அனைத்து நடவடிக்கைகளையும் வழங்குவதில் அருங்காட்சியகத்திற்கு ஆதரவளிக்கும் ஸ்தாபகபுரவலர்கள் 2024 இன்மகத்தான ஆதரவை நன்றியுடன் அங்கீகரிக்கிறது.
நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகம் (MMCA இலங்கை), கல்வியை முதன்மைப்படுத்தும் ஒருமுன் முயற்சியாகும். பொது மக்கள், பாடசாலைகள், மற்றும் சுற்றுலா பயணிகளின் நலன் மற்றும் இன்பத்திற்காக, நவீன மற்றும் சமகால கலைகளின் காட்சி, ஆராய்ச்சி, சேகரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்ட பொது அருங்காட்சியகத்தை நிறுவுவதே இதன் நோக்கமாக உள்ளது. அருங்காட்சியகம் தினமும் மு.ப 10 மணிமுதல் பி.ப 6 மணிவரை (பௌர்ணமி மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர), கொழும்பு 3 இல் அமைந்துள்ள க்ரெஸ்கட்புலவாட் இன் தரைத் தளத்தில் திறந்திருக்கும். மேலும், அருங்காட்சியகத்துக்கும் அதன் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம் ஆகும். அருங்காட்சியகம், அதன் கண்காட்சிகள் மற்றும் பொதுநிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை அவர்களின் இணையதளமான www.mmca-srilanka.org இல் அல்லது முகநூலில் facebook.com/mmcasrilanka மற்றும் இன்ஸ்டகிராமில் instagram.com/mmcasrilanka/ பார்த்துஅறியலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
26 minute ago
2 hours ago
3 hours ago