Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 06, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2025 ஜனவரி 26 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - கற்பிட்டி, கீரிமுந்தல் மற்றும் துறையடி ஆகிய கடற்பிரதேசங்களில் இருந்து ஒரு தொகை மஞ்சள் மற்றும் ஏலக்காய் என்பவற்றுடன் இரு சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை (24) அன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமேற்கு கட்டளையின் விஜய நிறுவன கடற்படையினர் வெள்ளிக்கிழமை (24) கற்பிட்டி கீரி முந்தல் கடற்பிரதேசத்தில் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையின் போது 8 உர மூட்டைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 240 கிலோ கிராம் ஏலக்காய் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட டிங்கி இயந்திர படகு ஒன்றை கடற்படையினர் சோதனையிட்ட போது, குறித்த டிங்கி இயந்திர படகில் இருந்து 40 உர மூட்டைகளில் அடைக்கப்பட்ட நிலையில் 1231 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 3 பொதிகளில் அடைக்கப்பட்ட 102 கிலோ கிராம் ஏலக்காய் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 23 மற்றும் 48 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவருடன் , கைப்பற்றப்பட்ட உலர்ந்த மஞ்சள் , ஏலக்காய் மற்றும் டிங்கி இயந்திர படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.
ரஸீன் ரஸ்மின்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
40 minute ago
42 minute ago
49 minute ago