2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

போதைப்பொருள் வியாபாரி கைது

Janu   / 2023 நவம்பர் 19 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்று இலங்கை திரும்பிய போதைப்பொருள் வியாபாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (19)   கட்டுநாயக்க விமான நிலையத்தை வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு - பொரளை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், திருகோணமலை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு போதைப்பொருள் வழங்கியவர் என தெரியவந்துள்ளது.

சந்தேக நபர், தனது குடும்ப உறுப்பினர்களுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா பயணத்தை முடித்துக் கொண்டு பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-405 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது  பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

​ ரஸீன் ரஸ்மின

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .