2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பொலிஸ் பிடியிலிருந்து தப்பி மீண்டும் கைது

Freelancer   / 2023 ஒக்டோபர் 22 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் குருநாகல் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்று மோதரை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் குருநாகல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடமிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் குருநாகல் பொலிஸாரால் 7 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் குருநாகல் வவ்கல பிரதேசத்தைச் சேர்ந்த (24) வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் அப்பெண்  குருநாகல் பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .