2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

புதையல் தோண்டிய 7 பேர் கைது

Mayu   / 2024 மே 19 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஆர்.லெம்பேட்

மன்னார்-பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் கடற்படை அதிகாரியொருவர் உள்ளடங்களாக 7 பேர் சனிக்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் மற்றும் பேசாலை பொலிஸார் இணைந்து சனிக்கிழமை (18) பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் திடீர் சோதனை நடவடிக்கையை  மேற்கொண்டனர்.

இதன் போது புதையல் தோண்டிய நிலையில்,புதையல் தோண்டும் உபகரணங்களுடன் 7 பேரை பொலிஸார் கைது செய்தனர்.



கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை அதிகாரி என தெரிய வந்துள்ளது.ஏனையவர்கள் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



மேலும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு வாகனங்கள் ஸ்கேனர் இயந்திரம்,மந்திரப் பொருட்கள் ஆகியவையும் மீட்கப்பட்டு பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .