2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

புதையல் தோண்டிய நால்வர் கைது

Janu   / 2023 செப்டெம்பர் 12 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - கருவலகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெவநுவர பிரதேசத்தில் புதையல் தோண்டியதாக சந்தேகத்தின் பெயரில் நால்வரை கைது செய்யப்பட்டதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் புதையல் தோண்டுவதாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அங்கு சுற்றிவளைப்பை மேற்கொண்ட போதே  குறிப்பிட்ட  நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

மேலும், புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பெகோ இயந்திரம் உள்ளிட்ட ஏனைய பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நான்கு பேரும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

குறிப்பிட்ட  சம்பவம் தொடர்பில்  கருவலகஸ்வெவ பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 ரஸீன் ரஸ்மின்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .