Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஜூலை 28 , பி.ப. 02:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேருவளையை சேர்ந்த ஸஹ்மி ஸஹீட் எனும் இளைஞன் இலங்கையின் கரையோர வீதிகள் ஊடாக சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்தை நடந்து சாதனைப்படைக்க முயற்சியினை எடுத்துள்ளார்.
இவர் பேருவளையில் இருந்து ஆரம்பித்து, தொடர்ந்து 15 நாட்கள் நடந்து சென்று கொண்டிருக்கின்றார். சனிக்கிழமை (27) காலை நிந்தவூரில் இருந்து மட்டக்களப்பு குருக்கள்மடம் வரை தமது பயணத்தை நிறைவு செய்திருந்தார்.
இந்நிலையில் 50 நாட்கள் கொண்ட இந்த பயணத்தை ஞாயிற்றுக்கிழமை காலை (28) குருக்கள்மடம் கிராமத்திலிருந்து தனது பயணத்தை மட்டக்களப்பு நோக்கி ஆரம்பித்தார்.
நடைப்பயணம் மேற்கொண்டுள்ள இளைஞனுக்கு கிராமங்கள் தோறும் இளைஞர்கள் வரவேற்று அவருடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொள்ளவதை அவதானிக்க முடிகின்றது.
தனது நடைப் பயணம் தொடர்பில் அவர் கூறுகையில் சுதந்திரமான இலங்கையின் அழகான கரையோரத்தை காலால் நடந்து இரசிப்போம் எனும் தொனிப்பொருளில் தான் இந்த நடைப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வ.சக்தி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
37 minute ago
49 minute ago