Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Janu / 2024 மார்ச் 14 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வென்னப்புவ நகரில் பெண்ணொருவர் மீது பஸ் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை (13) இடம்பெற்றுள்ளதாக வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லுனுவில, ஜயா மாவத்தையைச் சேர்ந்த பெடில்லே பொடி மெனிகே எனும் 69 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
பாதசாரிகள் குழுவொன்று வீதியைக் கடக்கும் போது, நீர்கொழும்பு பகுதியில் இருந்து சிலாபம் நோக்கிச் சென்ற பஸ் ஒன்று நிறுத்தப்பட்டு, மீண்டும் முன்னோக்கிச் செல்ல முற்பட்டுள்ள போது முன்பக்கமாக வீதியைக் கடக்க முயன்ற குறித்த பெண் மீது பஸ் மோதி , உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் .
மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் வென்னப்புவ போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
ரஸீன் ரஸ்மின்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago